முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ஓபன் பேட்மிண்டன்: பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

சனிக்கிழமை, 3 பெப்ரவரி 2018      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்று வரும் இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி. சிந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்துவும், ஸ்பெயினின் பீட்ரிஸ் கொரலெசும் மோதினர்.

அரையிறுதிக்கு....
இப்போட்டியின் முதல் சுற்றை சிந்து 21-12 என எளிதாக கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டை ஸ்பெயின் வீராங்கனை 21-19 என கைப்பற்றினார். மூன்றாவது செட்டில் அதிரடியாக விளையாடிய சிந்து அந்த செட்டையும் 21-11 என கைப்பற்றினார். இதன்மூலம் 21-12, 19-21, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற சிந்து அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார்.

சாய்னா வெளியேற்றம்
இதேபிரிவில் நடைபெற்ற மற்றொரு பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவாலும், அமெரிக்காவின் பெய்வான் சாங்கும் மோதினர். இதில் 21-10, 21-13 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற பெய்வான் சாங் அரையிறுதிக்கு முன்னேறினார்.

சீன வீரர் வெற்றி...
முன்னதாக நடைபெற்ற மற்றொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்திய வீரரான காஷ்யப், சீனாவின் பின் கியாவோவை எதிர்கொண்டார். இப்போட்டியில் 21-16, 21-18 என்ற நேர் செட்களில் சீன வீரர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

நேர் செட்களில்...
மற்றொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டியில் இந்திய வீரர் சவுரப் வெர்மாவும், மலேசியாவின் இஷ்காந்தர் சுல்கர்நயனும் மோதினர். இப்போட்டியின், முதல் இரண்டு செட்களையும் 21-17, 21-14 என்ற நேர் செட்களில் மலேசிய வீரர் கைப்பற்றினார். இதன் மூலம் தோல்வியடைந்த சவுரப் வெர்மா தொடரைவிட்டு வெளியேறினார்.

டியன்-சென் வெற்றி
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத்தும், தாய்வானின் சோ டியன்-சென்னும் மோதினர். இப்போட்டியில் 21-15, 21-13 என்ற நேர் செட்களில் சோ டியன்-சென் வெற்றி பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து