முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலிபான் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆப்கன்-பாக் அதிகாரிகள் ஒரு நாள் பேச்சுவார்த்தை

ஞாயிற்றுக்கிழமை, 4 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

காபூல்: ஆப்கானிஸ்தானில் அண்மையில் அதிகரித்துள்ள பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக அந்த நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிப்பதற்காக, இரு நாடுகளின் அதிகாரிகளும் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆப்கன் தலைநகர் காபூலில் நடைபெற்ற இந்த ஒரு நாள் பேச்சுவார்த்தையின்போது, இருநாட்டு நல்லுறவைப் பேணுவதற்காக இரு நாட்டுத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.

பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாடுகளும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் மற்றும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் கடந்த சில நாள்களாக அடுத்தடுத்து நடத்தி வரும் தாக்குதல்களில் சுமார் 200 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதல்களை நிகழ்த்தி பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருவதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது.

பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்தியவர்கள், பாகிஸ்தானில் பயிற்சி பெற்றதற்கான ஆதாரங்கள் உள்ளதாக ஆப்கன் வெளியுறவுத் துறை அமைச்சர் வாயிஸ் அகமது பர்மாக் கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதச் செயல்களை நடத்தி வரும் தலிபான் தலைவர்கள், பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவதாகவும் அவர் புகார் தெரிவித்தார். முன்னதாக, அவரும், ஆப்கன் உளவு அமைப்பின் தலைவர் மாஸும் ஸ்டெனக்ஸாயும் பாகிஸ்தானுக்கு நேரடியாக சென்று, பிடிபட்ட பயங்கரவாதிகளின் வாக்குமூலங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை சமர்ப்பித்தனர்.

ஆப்கானிஸ்தானின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த பாகிஸ்தான் அதிகாரிகள், இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த ஆப்கானிஸ்தான் செல்வதாக அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், ஆப்கன் அதிகாரிகளுடன் அவர்கள் காபூலில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து