ஜெய்க்கு கைக்கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ்

ஞாயிற்றுக்கிழமை, 4 பெப்ரவரி 2018      சினிமா
jay

Source: provided

பலூன் படத்திற்குப்பிறகு ஜெய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘ஜருகண்டி’ படத்தின் போஸ்டரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டிருக்கிறார்.

'பலூன்' படத்தின் மூலம் வெற்றியை சுவைத்துள்ள ஜெய்யின் அடுத்த படம் 'ஜருகண்டி'. இப்படத்தை வெங்கட் பிரபுவின் முன்னாள்  இணை இயக்குனர் பிச்சுமணி இயக்கி வருகிறார். இப்படத்தை நடிகர் நிதின் சத்யா மற்றும் பத்ரி கஸ்துரி ஆகியோர் தயாரித்து வருகிறார்கள்.

'ஜருகண்டி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று, இந்தியா முழுவதும் மொழி எல்லைகளை தாண்டி தனக்கென ரசிகர்களை பெற்றிருக்கும் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ரிலீஸ் செய்தார்.

நல்ல சினிமாவை என்றுமே ஊக்குவிக்கும் ஏ.ஆர்.முருகதாஸின் ஆதரவு இப்படத்திற்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது.''நல்ல படங்களை என்றுமே பாராட்டி ஆதரவு தரும் ஏ.ஆர்.முருகதாஸ் எங்கள் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.

எங்கள் படத்தின் 90 சதவீதம் படப்பிடிப்பு முடிந்து விட்டது. ஒரு தயாரிப்பாளராக இப்படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன்'' என நிதின் சத்யா பெருமையுடன் கூறினார்.

இப்படத்தின் ஜெய்க்கு ஜோடியாக ரேபா மோனிகா ஜான் நடிக்கின்றார். ரோபோ ஷங்கர், டேனி அருண், ஜெயக்குமார், போஸ் வெங்கட் மற்றும் இளவரசு ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில், போபோ சஷியின் இசையில், பிரவீன் கே.எல். படத்தொகுப்பில், ரேமியன் கலை இயக்கத்தில், டான் அசோக்கின் ஸ்டண்ட் இயக்கத்தில் 'ஜருகண்டி' வருகின்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து