தென் ஆப்பிரிக்காவை ஊதித்தள்ளியது இந்தியா : 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 4 பெப்ரவரி 2018      விளையாட்டு
india beat southafrica 2018 1 4

டர்பன் : செஞ்சூரியனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

119 ரன்கள் எனும் இலக்கை துரத்திய இந்திய அணி ஓவர்களில் இலக்கை அடைந்தது.

தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்று தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.

டர்பனில் நடந்த முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், 2-வது ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.

தென் ஆப்பிரிக்க அணியில் டூப்பிளசிஸ், ஆல்ரவுண்டர் பிபெல்கோயாவுக்கு பதிலாக ஜோன்டோ, ஷம்சி சேர்க்கப்பட்டு இருந்தனர். புதிய கேப்டன் மார்கிரம் தலைமையில் தென் ஆப்பிரிக்கா முதல் போட்டியை சந்திப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 32.2 ஓவர்கள் 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மிகவும் எதி்ர்பார்க்கப்பட்ட தென் ஆப்ரிக்காவின் பேட்டிங் ஏமாற்றமளித்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள் ஹசிம் அம்லா(23), குயின்டன் டீ காக்(20), டுமினி(25), ஜோன்டோ(25) ஆகியோர் சேர்த்த ரன்களே அதிகபட்சமாகும் மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.  தென் ஆப்பிரிக்க அணி 51 ரன்கள் எட்டியபோது, அடுத்த ரன்னை எடுப்பதற்குள் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது பரிதாபமாகும்.

குல்தீப் யாதவ் வீசிய 13வது ஓவரின் முதல்பந்தில் கேப்டன் மார்கிரம் (8) அதே ஓவரின் 5-வது பந்தில் ரகானேவிடம் கேட்ச் கொடுத்து டேவிட் மில்லர் டக்அவுட் முறையில் வெளியேறினார். இதனால் 51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்க

இதேபோல 99 ரன்களுக்கு 5-வது விக்கெட்டை இழந்திருந்த தென் ஆப்பிரிக்கா அடுத்த 19 ரன்களுக்குள் மீதிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. 117 ரன்னில் இருந்து அடுத்த ஒரு ரன் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்பிரிக்கா அணியில் அனுபவம் குறைந்த வீரர்களும், நெருக்கடியான நேரத்தை எதிர்கொள்ள முடியாதவர்கள் என்ற பெயரும் இன்னும் நீங்கவில்லை என்பதையே காட்டுகிறது. ( ஆங்கிலத்தில் இதை “சோக்கர்ஸ்” என்று தென் ஆப்பிரிக்காவை வழக்கமாக அழைப்பதுண்டு).

32.2 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியத் தரப்பில் யுவேந்திர சாஹல் 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 119 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிமையான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மிகவும் எளிதான இலக்கு என்பதால், ரோகித் சர்மாவும், தவானும் அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கினர். ரோகித்சர்மா ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்து வந்தவேகத்தில் 15 ரன்களில் வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு தவானுடன் கேப்டன் விராத் கோலி ஜோடி சேர்ந்தார்.

இருவரும் பதற்றம் இல்லாமல் ரன்களை நிதானமாகச் சேர்க்கத் தொடங்கினர். முதல் பவர் ப்ளே ஓவரில் இந்திய அணி 57 ரன்களைச் சேர்த்தது. மோசமான பந்துகளை மட்டும் தேர்வு செய்து பவுண்டரிகளுக்கு விரட்டிய தவான் 49 பந்துகளில் தனது 23-வது ஒருநாள் அரைசத்தை எட்டினார். அதன்பின் விராட் கோலியும், தவானும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

20.3 ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 119ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. தவான் 51 ரன்களுடனும், கோலி 46 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியைடுத்து 6 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்று இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து