முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருப்புக்கோட்டையில் புதிய தேர் வெள்ளோட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 4 பெப்ரவரி 2018      விருதுநகர்
Image Unavailable

அருப்புக்கோட்டை -   அருப்புக்கோட்டை புளியம்பட்டி, திருநகரம் சாலியர் மகாஜன பரிபாலன சபைக்கு பாத்தியப்பட்ட புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் பழைய தேருக்கு பாலாலயம் செய்யப்பட்டது. அதனையொட்டி இன்று காலை மகாகணபதி பூஜை, புண்ணியாக வாசனம், மகா கணபதி ஹோமம், புதிய தேரில் யந்திரஸ்தாபனம், மகாஅபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது. இதற்க்கான ஏற்ப்பாடுகளை உறவின்முறை தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர். இது குறித்து அவர் கூறுகையில்: 10 டன் எடை கொண்ட புதிய தேர் தேக்கு மற்றும் இலுப்பை மரங்களால் செய்யப்பட்டுள்ளது. தேரை சுற்றிலும் அம்மன் அவதாரங்களும், குல தெய்வங்களும் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. தேர் செய்வதற்கு ஓர் ஆண்டு முதல் குறைந்த பட்சம் 4 மாதங்களாவது தேவைப்படும்.  புதிய தேர் 3 மாதங்களுக்குள் கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்குள் வடிவமைக்கப்பட்டதால் கின்னஸ் சாதனைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், மேலும் திருத்தேர் வெள்ளோட்டத்திற்க்கு ஒத்துழைப்பு வழங்கிய பொதுப்பணித்துறை, காவல்துறை,  மின்வாரியம், பி.எஸ்.என்.எல். ஆகிய அரசு துறை அலுவலர்களுக்கு நன்றி  கூறினார்.            

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து