நத்தத்தில் கும்பாபிஷேக விழா

ஞாயிற்றுக்கிழமை, 4 பெப்ரவரி 2018      திண்டுக்கல்
Kumbabishekha Festival  4 2 18

  நத்தம்,-   திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டியில் உள்ள பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் சந்தனக்கருப்பு கோவிலிருந்து மேளதாளம் முழங்க கன்னிமார் தீர்த்தம் அழைத்துவரபட்டது. தொடர்ந்து 2 நாட்கள் யாகசாலை பூஜைகள் நடந்தது. பின்னர் 4வது நாள் யாகசாலையிருந்து காவேரி,கங்கை,காசி,ராமேஸ்வரம்,கன்னிமார் உள்ளிட்ட பல்வேறு புனிதஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் ஊர்வலமாக கோபுரஉச்சிக்கு எடுத்து செல்லபட்டது.
     அங்கு சிவாச்சாரியார்களின் வேதமந்திரம் முழங்க குடம்குடமாக புனித தீர்த்தங்கள் கலசங்களில் ஊற்றபட்டது. அப்போது கோவிலை சுற்றி ஏராளமான பக்தர்கள் நின்று தரிசனம் செய்தனர். அவர்களுக்கு புனித தீர்த்தமும்,பூஜை மலர்களும் வழங்கபட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரம்,தீபாரதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அறுசுவை உணவு அன்னதானம் வழங்கபட்டது. விழா ஏற்பாடுகளை ந.கோவில்பட்டி மேலத்தெரு கிராமபொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து