திண்டுக்கல் அருகே விபத்து போலீஸ்காரர் உட்பட 2 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 4 பெப்ரவரி 2018      திண்டுக்கல்
policeman  were killed 4 2 18

திண்டுக்கல்,- திண்டுக்கல் கார் மீது லாரி மோதிய விபத்தில் ஜக்கையன் எம்.எல்.ஏ.வின் பாதுகாப்பு போலீஸ்காரர் உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கம்பம் வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் குமார்(30). இவர் கம்பம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஜக்கையனின் பாதுகாப்பு பணியில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். நேற்று ஜக்கையன் எம்.எல்.ஏ. சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அவரை திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து அழைத்து வருவதற்காக காரில் குமார் வந்து கொண்டிருந்தார். காரை தேனி சிவாஜி நகரைச்  சேர்ந்த கன்னையா(32) என்பவர் ஓட்டி வந்தார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தவர்.
கார் திண்டுக்கல் அருகே சித்தையன்கோட்டை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி கண் இமைக்கும் நேரத்தில் மோதியது. இதில் கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. விபத்தில் காருக்குள்ளேயே குமாரும், கன்னையாவும் துடிதுடித்து உயிரிழந்தனர். இதுகுறித்து செம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவர்கள் உடல்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்து கேள்விப்பட்டதும் ஜக்கையன் எம்.எல்.ஏ. அரசு மருத்துவமனைக்கு வந்து அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து