முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரம் திருக்கோயிலில் மாசித்திருவிழா நாளை காலையில் கொடியேற்றத்துடன் துவக்கம்.

ஞாயிற்றுக்கிழமை, 4 பெப்ரவரி 2018      ராமநாதபுரம்
Image Unavailable

 .ராமேசுவரம்,- ராமேசுவரம்  திருக்கோயிலில் வருடந்தோறும் நடைபெறும் திருவிழாக்களில் முக்கிய திருவிழாவான மாசி மாகா சிவராத்திரி திருவிழா நாளை செவ்வாய்க்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
 ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் 12 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் மாசி மகாசிவராத்திரி திருவிழா நாளை செவ்வாய்க்கிழமை காலையில் 7 மணி முதல் 8 மணி க்குள் திருக்கோயிலில்  வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்று,இதன் தொடர்ச்சியாக 10.31 மணி முதல் 12 மணிக்குள் சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள தங்க முலாம் பூசப்பட்ட கொடி மரம் முன்பு கோயிலின் மூத்த குருக்கள்களால் மந்திரங்கள் வாசிக்கப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் தீபாரதணை வழிபாடுகளுடன்  கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளன. இதனை தொடர்ந்து 12 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் முக்கிய திருவிழாவான பிப்ரவரி 13 ஆம் தேதி மகாசிவராத்திரியையொட்டி அன்று இரவு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள், வெள்ளிரதத்தில் புறப்பாடாகி நான்கு ரத வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சியும். தொடர்ந்து பிப்ரவரி 15 ஆம் தேதி அமாவாசையையொட்டி சுவாமி,அம்பாள் அக்னிதீர்த்தக்கடலில் எழுந்தொருளி தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளன. இதையடுத்து 12 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் ஒவ்வொரு நாள்களிலும் இரவு திருக்கோயிலின் வடக்கு நந்தவனக்கலையரங்கில் இன்னிசை நிகழ்ச்சிகளும்,ஆன்மிக பட்டிமன்றங்களும் நடைபெறவுள்ளதாகவும், திருவிழாவையொட்டி சுவாமி,அம்பாள் தினசரி ஒவ்வொரு வாகனத்திலும் புறப்பாடகி நான்கு ரத வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகவும்,இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் உதவி ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில், பொறியாளர் மயில்வாகனன் ஆலோசணையில் இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கமலநாதன் மற்றும் திருவிழா நிகழ்ச்சி பேஷ்கார் கண்ணன் ஆகியோர்கள் செய்து வருவதாகவும் திருகோயிலின் இணை ஆணையர் மங்கையர்க்கரசி ஞாயிற்றுக் கிழமை தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து