முதல்வர் இ.பி.எஸ் ஆட்சியின் ஒராண்டு நிறைவுநாள்: தமிழகம் முழுவதும் பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 4 பெப்ரவரி 2018      தமிழகம்
Kadambur raju 2017 10 14 0

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் ஓராண்டு நிறைவையொட்டி மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என திருப்பதியில் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு நேற்று காலை குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். பின்னர் கோயிலுக்கு வெளியே நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது,

வரும் 14-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஓராண்டு நிறைவையொட்டி, பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.  மேலும் நடிகர்கள் புதிய கட்சி தொடங்குவதால் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு ஏற்படுமா என்று நிருபர்கள் கேட்ட போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒன்றரை கோடி அ.தி.மு.க தொண்டர்களும் குறையில்லாமல் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நாங்கள் செய்தித்தொடர்பு துறையின் சார்பில் சாதனை மலரும் குறும்படமும் வெளியிட இருக்கிறோம். நடிகர்கள் கட்சி தொடங்குவதால் அ.தி.மு.க ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. கட்சி தொடங்குபவர்களுக்குத்தான் பாதிப்பாக அமையும் என்று தெரிவித்தார்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து