முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் எந்த எரிவாயு திட்டமும் நடைபெறவில்லை: மத்திய அமைச்சர்

திங்கட்கிழமை, 5 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, இரு நாட்கள் பொது விடுமுறைக்குப் பின்னர் நாடாளுமன்றக் கூட்டம் நேற்று மீண்டும் கூடியது. அப்போது எரிவாயு மீதான விவாதம் நடைபெற்றபோது உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்தார்.

அதில், தமிழகத்தில் மீத்தேன் அல்லது ஷெல் காஸ் உள்ளிட்ட எந்த திட்டமும் நடைபெறவில்லை. கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி சார்பில் எந்த புதிய திட்டமும் தொடங்கப்படவில்லை என்றார்.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:

தமிழகத்தில் மீத்தேன், ஷெல் காஸ், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த எரிவாயு திட்டங்களும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. தமிழக அரசு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் அனுமதியை பெற்ற பிறகே நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் உற்பத்தியை தொடங்க முடியும்.

அதுபோல கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி சார்பில் எந்த புதிய திட்டமும் தொடங்கப்படவில்லை. தமிழகத்தில் கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு அமைப்பை ஏற்படுத்த சாத்தியமுள்ள புவியியல் இடங்களாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து