மின்சாரம் தாக்கி பலியான 14 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

திங்கட்கிழமை, 5 பெப்ரவரி 2018      தமிழகம்
CM Edapadi2 2017 9 3

சென்னை : மின்சாரம் தாக்கி பலியான 14 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தருமபுரி, வேலூர்...

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-


தருமபுரி மாவட்டம் நல்லாம்பட்டி கிராமத்தில் கணேசன், முருகன், கரூர் மாவட்டம், திருக்காம்பூலியூர் கிராமத்தைச் சேர்ந்த அசோக் குமார், வெங்கமேடு கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். வேலூர் மாவட்டம் வேம்பி கிராமத்தைச் சேர்ந்த தேவன், சேலம் மாவட்டம் மேச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சத்தியன் மின் மாற்றியில் பழுது நீக்கும் பணியின்போதும், திருச்சி மாவட்டம் வரகனேரி கிராமத்தைச் சேர்ந்த தனசேகரன் மின்கம்பத்தில் பழுது நீக்கும் பணியின் போதும் தவறி விழுந்து உயிரிழந்தனர்.

நாகப்பட்டினம்...

நாகப்பட்டினம் மாவட்டம் கங்காதரபுரம் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். திருச்செந்தூர் கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மின் கம்பத்தில், பழுது நீக்கும் பணியின் போதும் திருவள்ளூர், குமார ராஜபேட்டை கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் மருத்துவ மனையில் பணியில் இருந்த போதும், மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். மதுரை மாவட்டம் நரசிங்கம் 4 பிட் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி இயலரசி விளையாடிக் கொண்டிருந்த போது, எர்த் கம்பியை பிடித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

தலா ரூ.3 லட்சம்...

மதுரை மாவட்டம், மேலூர் தெற்குத்தெரு கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா, வேலூர் மாவட்டம் வாலாஜா, வன்னிவேடு மதுரா இந்திரா நகரைச் சேர்ந்த ஜானகிராமன் மின்கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். புதுக்கோட்டை அறந்தாங்கி, அத்தாணி வடக்கு வட்டத்தைச் சேர்ந்த பாலையா மின்கம்பியை தொட்டதில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தர விட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து