நியாயவிலை கடை, உள்ளிட்ட பல்வேறு பணிகளை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ துவக்கி வைத்தார்

திங்கட்கிழமை, 5 பெப்ரவரி 2018      மதுரை
sellur raj  5 2 18

மதுரை.- மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 வார்டு எண்.75 முனியாண்டிபுரத்தில் ரூ.38.75 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைகடை, அங்கன்வாடி மையம் மற்றும் தார்சாலை ஆகிய பணிகளை ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்,  தலைமையில்     அமைச்சர்  செல்லூர் கே ராஜூ   திறந்து வைத்து பேசும்போது தெரிவித்ததாவது :
மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்குவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேற்கு தொகுதிக்கு உட்பட்ட முனியாண்டிபுரத்தில் பொதுமக்களின் கோரிக்கையான குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதி, சாலை வசதி, தெரு விளக்கு வசதி ஆகியவை நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.7.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடமும், ரூ.4.65 லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலை கடை கட்டிடமும், ரூ.26.80 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை பணியும் என மொத்தம். ரூ.38.75 லட்சம் மதிப்பிலான பணிகள் முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை மாநகராட்சியின் மூலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை வசதி, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை பணி என ரூ.950.96 லட்சம் மதிப்பீட்டிலான பணிகள் முடிக்கப் பட்டுள்ளது. ரூ.240.82 லட்சம் மதிப்பீட்டிலான பணிகள் நடை பெற்று வருகிறது. ரூ.253.08 லட்சம் மதிப்பிலான பணிகள் நடை பெற உள்ளது என மொத்தம் சுமார் ரூ.1444 லட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மதுரை மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு அரசின் நியாய விலை பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு எம்.ஜி.ஆர் அவர்களால் 4441 கடைகள் தொடங்கப்பட்டு படிப்படியாக உயர்ந்து தற்போது 32777 நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் சுமார் 1 கோடியே 93 லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 7 ஆண்டுகளில் 92 லட்சம் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மாண்புமிகு அம்மா அவர்கள் கொண்டு வந்த பண்ணை பசுமை வீடுகள், அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட், மடிக்கணினி, தாலிக்கு தங்கம் என பல்வேறு திட்டங்கள் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டங்கள் ஆகும். குடிமராமத்து பணிகள் மூலம் நீர் நிலைகள் ஆழப்படுத்திய காரணத்தினால் நீர் அதிகமாக தேக்கப்பட முடிந்தது. அகில இந்திய அளவில் தமிழ்நாட்டில்தான் கூட்டுறவுத் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றி வரும் அம்மாவின் அரசிற்கு என்றும் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
 இந்நிகழ்ச்சியில் ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்,  கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர்  .சந்திரசேகரன், மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர்  துரைப் பாண்டியன், பாண்டியன் கூட்டுறவு அங்காடி தலைவர்  ராஜா, முன்னாள் மேயர்  கு.திரவியம், செயற்பொறியாளர்  சேகர், மக்கள் தொடர்பு அலுவலர்  சித்திரவேல், உதவி செயற்பொறியாளர்  ஆரோக்கிய சேவியர், சுகாதார அலுவலர்கள்  ராஜ்கண்ணன், உதவிப்பொறியாளர்  முத்துராமலிங்கம், சுகாதார ஆய்வாளர்  சுப்புராஜ், உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து