முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் யூனியனில் குறை தீர்க்கும் முகாம்கள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்:

திங்கட்கிழமை, 5 பெப்ரவரி 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாம்களை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து  கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டதுடன் ரூ.15லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் தமிழக அரசின் சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்களை நடத்தி பொதுமக்களின் பல்வேறு விதமான கோரிக்கைகளை நிறைவேற்றிடும் வகையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரும்,கழக அம்மா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.அதன்படி தற்போது திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அ.கொக்குளம்,கிண்ணிமங்கலம், மேலஉரப்பனூர், மற்றும் சாத்தங்குடி உள்ளிட்ட  இடங்களில் நேற்று மாலை தமிழக அரசின் சார்பில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் வெகுசிறப்பாக நடைபெற்றது.இந்த முகாமிற்கு உசிலம்பட்டி கோட்டாட்சியர் சுகன்யா தலைமை வகித்தார்.மதுரை புறநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அய்யப்பன் முன்னிலை வகித்தார்.முன்னாள் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சாத்தங்குடி தமிழழகன்,திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் வக்கீல்.அன்பழகன் ஆகியோர் வரவேற்று பேசினார்கள்.தொகுதி மக்களின் நலன் கருதி நடைபெற்ற இந்த முகாம்களின் திறப்பு விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரும்,கழக அம்மா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டுசிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம்களை திறந்து வைத்தார்.
பின்னர் முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள்,நலத்திட்ட கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்ட அமைச்சர் மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.மேலும் முகாமில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான பயனாளிகளுக்கு ரூ.15லட்சம் மதிப்பிலான தமிழக அரசின் சார்பில் முதியோர் உதவித்தொகை,வீட்டுமனைப் பட்டா,சமூக பாதுகாப்பு மற்றும் வேளாண்மை, தோட்டக்கலை துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கி சிறப்புரையாற்றினார்.அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:  அம்மா அவர்கள் இருந்தபோது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் அம்மாவின் அரசு தற்போது 100சதவீதம் நிறைவேற்றி வருகிறது.அதற்காகத்தான் விடுமுறை நாட்களிலும் கூட  மக்களைத் தேடி அரசின் நலத்திட்ட உதவிகள் வந்து கொண்டிருக்கிறது.கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பல்வேறு சோதனைகளை வெற்றிகரமாக அம்மாவின் அரசு கடந்து சாதனை படைத்துள்ளது.எஞ்சியுள்ள மூன்றரை ஆண்டுகளிலும் சோதனைகள் அனைத்தையும் சாதனைகளாக்கி அம்மாவின் அரசு தனது முழு ஆயுள் காலத்தையும் பூர்த்தி செய்திடும்.அதே சமயம் அம்மா அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களால்  திருமங்கலம் தொகுதி தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாறுவது நிச்சயம்.இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சிகளில் திருமங்கலம் வட்டாட்சியர் நாகரத்தினம்,சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் லட்சுமி,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம்,மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி,மாவட்ட எம்.ஜி.ஆர்மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,:கள்ளிக்குடி ஒன்றிய கழக செயலாளர் மகாலிங்கம்,கல்லுப்பட்டி ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி,பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன், பாலசுப்பிரமணியன், ஒன்றிய துணைச் செயலாளர் சுகுமார்,இணைச் செயலாளர் சுமதிசாமிநாதன், அவைத்தலைவர் அன்னக்கொடி,திருமங்கலம் கூட்டுறவு நிலவள வங்கியின் தலைவர் கபிகாசிமாயன்,முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சாமிநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து