சீக்கியர் கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெகதீஷ் டைட்லரை கைது செய்யக் கோரி புகார்

செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2018      இந்தியா
Jagdish Tytler 2018 02 06 0

புது டெல்லி, கடந்த 1984-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் டைட்லரை உடனடியாகக் கைது செய்யக் கோரி பா.ஜ.கவின் தேசியச் செயலர் ஆர்.பி.சிங், பாராளுமன்ற சாலை காவல் நிலைய கூடுதல் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

இது குறித்து ஆர்.பி.சிங் கூறியதாவது:

டெல்லியில் 1984-ல் நிகழ்ந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான 5 ரகசிய வீடியோக்கள், டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழுவால் வெளியிடப்பட்டன. அந்த வீடியோக்களில் சீக்கியர்கள் படுகொலைக்கும் தனக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள தொடர்பை ஜெகதீஷ் டைட்லர் வெளிப்படுத்தியுள்ளதுடன் டெல்லியில் 100 சீக்கியர்களைக் கொன்றுள்ளதாகவும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். நான்காவது வீடியோவில் காங்கிரஸ் கட்சியால் நீதித் துறையை சமாளிக்க முடியும் எனவும், 15 ஆண்டுகளாக வழக்கை இழுத்தடித்துள்ளோம்; நீதித் துறையால் என்னை எதுவும் செய்ய முடியாது என்றும் அவர் சொல்வது பதிவாகியுள்ளது. ஜெகதீஷ் டைட்லர் எந்த நேரமும் நாட்டை விட்டு வெளியேறக் கூடும் என்பதால் அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். இந்திய குற்றவியல் சட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனக் கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து