முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பால் வீதிக்கு வெளியே புதிய கிரகங்கள்: ஆதாரத்துடன் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: சூரிய குடும்பத்தின் பால்வீதிக்கு வெளியே முதல்முறையாக புதிய கிரகங்களை கண்டுபிடித்து அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர் நமது பால்வீதியில் புதிய கிரகங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே கண்டறிந்துள்ளனர். இந்நிலையில், முதன் முதலாக நமது சூரிய குடும்பத்தின் பால்வீதிக்கு வெளியே விண்வெளி மண்டலத்தில் புதிய கிரகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஒகலாமா பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இந்த கிரகங்களை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

நாசாவில் உள்ள சந்தரா எஸ்ரே ஆய்வகத்தின் உதவியுடன் ஜின்யூ டாய், எடுவர்டு கெர்ராஸ் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் இணைந்து புதிய கிரகங்கள் இருப்பதை ஆதாரப்பூர்வமாக கண்டறிந்துள்ளனர்.

மைக்ரோலென்சிங் நுண் தொழில்நுட்பம் மூலம் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கிரகங்கள் 3.8 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கிரகங்களுக்கு என்று தனியாக நிலா, வளிமண்டலம், புவிஈர்ப்பு விசை என்று தனித்தனியாக அமைந்துள்ளதாகவும், அவை நம் பூமியின் இயற்பியல் அடிப்படையுடன் ஒத்துப்போகவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு, இந்த கண்டுபிடிப்பால் தாங்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதாகவும், பால்வெளி வீதிக்கு அப்பால் புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுதான் முதல் முறை என்றும் கூறினர்.

மேலும் மைக்ரோலென்சிங் என்ற சக்திவாய்ந்த நுண் தொழில்நுட்பம் பற்றி அறிந்து கொள்வதற்கான சிறந்த உதாரணம் இந்த கண்டுபிடிப்பு என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்த கிரகங்களில் உயிரினங்கள் உள்ளனவா என்பது பற்றி ஆராய இன்னும் சக்திவாய்ந்த தொழில்நுட்பம் தேவை என்றும், அதுவரை இந்த கிரகம் இருப்பதை மட்டுமே நம்மால் உறுதி செய்ய முடியும் என்றும் பல ஆயிரம் கோடி மைல்களுக்கு அப்பால் உள்ளதால் அவற்றின் தட்பவெட்பம் சூழ்நிலை குறித்து தெரியவில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து