அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் - அக்னி-1 ஏவுகணை சோதனை வெற்றி

செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2018      இந்தியா
Agni-1 missile 2018 2 6

பாலச்சூர் : அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் அக்னி-1 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது.

12 டன்கள் எடை...

ஒரு டன் எடை கொண்ட அணு ஆயுத பொருட்களை சுமந்து சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கும் வல்லமை கொண்ட இந்த அக்னி -1 ஏவுகணை சுமார் 12 டன்கள் எடை கொண்டதாகும்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை ஒடிசா மாநிலம் பாலச்சூர் மாவட்டம் அப்துல் கலாம் தீவில் உள்ள கடற்கரை பகுதியில் சோதனை நடத்தப்பட்டது. 700 கி.மீ. தொலைவில் இருந்து இலக்கை துல்லியமாக தாக்கியது.


சோதனை வெற்றி...

அதிக திறன் கொண்ட அக்னி-1 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளதாக இந்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. அக்னி-1 ஏவுகணை சோதனை வழக்கமான பயிற்சிக்காக மேற்கொள்ளப்பட்ட சோதனைதான் என்று இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து