மாதம் முழுவதும் விருப்பம் போல் பயணம் செய்யும் ரூ.1,000 பயண அட்டை தொடரும் - தமிழக அரசு அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2018      தமிழகம்
tn bus usual 2017 5 15

சென்னை : மாநகர போக்குவரத்துக்கழகத்தால் வழங்கப்படும் மாதம் முழுவதும் விருப்பம் போல் பயணம் செய்யும் ரூ.1,000 பயணச்சலுகை அட்டை எந்தவித கட்டண உயர்வும் இன்றி தொடர்ந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் சலுகையுடன்...

இது குறித்து போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:-


மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் வழங்கப்படும் மாதம் முழுவதும் விருப்பம்போல் பயணம் செய்யும் ரூ.1,000/-க்கான பயணச் சலுகை, எவ்வித கட்டண உயர்வுமின்றி தொடர்ந்து ரூ.1,000/-க்கே வழங்கப்படும். மேலும், பயணிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர சலுகை அட்டை, புதிய கட்டண விகிதத்தில் கூடுதல் சலுகையுடன் வழங்கப்படும்.

சலுகை விலையில்...
உதாரணமாக, பழைய கட்டணத்தில் ரூ.240/-க்கு வழங்கப்பட்ட மாதாந்திர சலுகை பயண அட்டை ரூ.320க்கும், பழைய கட்டணத்தில் ரூ.280/-க்கு வழங்கப்பட்ட மாதாந்திர சலுகை பயண அட்டை ரூ.370க்கும்,

சலுகை விலையில் வழங்கப்படும். பிற போக்குவரத்துக் கழகங்களில் மாதாந்திர சலுகை அட்டை திட்டத்தில் 20 நாட்களுக்கான கட்டணத்தை செலுத்தி மாதம் முழுவதும் பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் எவ்வித கட்டண உயர்வுமின்றி தொடர்ந்து வழங்கப்படும்.  இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து