ராமேசுவரம் திருக்கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2018      ராமநாதபுரம்
rameswarem temble 7 2 18

 ராமேசுவரம்,-  ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா செவ்வாய்க் கிழமை காலையில் சிறப்பு பூஜையுடன் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்கியது.திருக்கோயிலில் 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் சுவாமி,அம்மன் அலங்காரத்தில்  தினசரி நான்கு ரதவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சியும், முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம்,வெள்ளிரதம்,தீர்த்தவாரி மற்றும்  சுவாமி,அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜைகளும்,தீபாராதணை வழிபாடுகளும் நடைபெறவுள்ளன.
 திருக்கோயிலில் மாசி மகாசிவராத்திரி திருவிழைவை முன்னிட்டு திங்கள் கிழமை இரவு 7 மணியளவில்   சிவாச்சாரியர்களால் வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது.இதனையடுத்து செவ்வாய்க் கிழமை அதிகாலையில்  4 மணி்க்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டது.பின்னர் தொடர்ந்து ஸ்படிகலிங்க பூஜையும் மற்றும் 5 கால பூஜையும் நடைபெற்றன. தொடர்ந்து  ராமநாதசுவாமி,பர்வதவர்த்தினி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடகி அறைவாசல் மண்டபத்தில் எழுந்தருளினர்.அதன் பின்னர் அப்பகுதியில் கணபதி ஹோம பூஜையில் நடைபெற்றது. பூஜையை தொடர்ந்து அங்கு திருவிழா தொடங்குவதற்கான காப்பு கட்டுதழ் நிகழ்ச்சி நடைபெற்றது.பின்னர்  சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள தங்க கொடிமரத்திற்கு கலசங்களில் வைக்கப்பட்டு ஹோமங்கள் வளர்க்கப்பட்ட புனித தீர்த்தங்களால் அபிஷேகம் நடைபெற்றன.அதனை தொடர்ந்து  திருக்கோயிலின் மூத்த குருக்கள்கள்  தலைமையில்  வேத மந்திரங்கள் வாசிக்கப்பட்டு காலையில் 10.31 முதல் 12 மணிக்கு கொடி ஏற்றம் நிகழ்ச்சியும்,தொடர்ந்து சுவாமி,அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும்,தீபாராதணை வழிபாடுகள் நடைபெற்றன.பின்னர் கோயில் சார்பில் பக்தர்களுக்கு  பிரசாதம் வழங்கப்பட்டன.கொடியேற்றம் நிகழ்ச்சியில் தக்கார் குமரன் சேதுபதி, கோயில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி, உதவி ஆணையர் பாலகிருஷ்ணன்,கோயில் கண்காணிப்பாளர்கள் ககாரீன்ராஜ், பாலசுப்பிரமணியன், பேஷ்கார்கள் கலைச்செல்வம்,அண்ணாத்துரை,கண்ணன்,செல்லம்,நேர்முக உதவியாளர் கமலநாதன்,அலுவலர்கள் ராமநாதன், உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 திருவிழாவில் முக்கிய  நிகழ்ச்சிகளான  பிப்ரவரி 13 ஆம் தேதி இரவு  வெள்ளி ரதம் நிகழ்ச்சியும், அதுபோல பிப்ரவரி காலையில் தேரோட்டம் நிகழ்ச்சியும்,  பிப்ரவரி 15 ஆம் தேதி  அமாவாசை முன்னிட்டு சுவாமி அம்மன் தங்க ரிஷ்ப வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடகி அக்னிதீர்த்தக்கடலில் நீராடி பக்தர்களுக்கு தீர்த்தம்  அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன.மேலும் 12 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் தினசரி ஒவ்வொரு  வாகனத்தில்,அலங்காரத்துடன் சுவாமி,அம்மன் திருக்கோயிலிருந்து புறாப்பாடகி நான்கு ரதவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளன.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து