82 பயனாளிகளுக்கு ரூ.6,35,348 - மதிப்பிலான வேளாண் கருவிகள் விருதுநகர் கலெக்டர் சிவஞானம், வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2018      விருதுநகர்
vnr collecter 7 2 18

  விருதுநகர்.- வேளாண்மைத்துறையின் மூலம் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு  மானிய விலையிலான வேளாண் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம்,  வழங்கினார்கள். இராஜபாளையம் வட்டாரத்தில் 7 பயனாளிகளுக்கு ரூ.19,411 - மதிப்பிலான கைத்தெளிப்பான்களையும்,  ில்லிபுத்தூர்  வட்டாரத்தில் 4 பயனாளிகளுக்கு ரூ.11,092 - மதிப்பிலான கைத்தெளிப்பான்களையும், வத்திராயிருப்பு வட்டாரத்தில் 10 பயனாளிகளுக்கு ரூ.27,730 - மதிப்பிலான கைத்தெளிப்பான்களையும், சாத்தூர் வட்டாரத்தில் 1 பயனாளிக்கு ரூ.96,000 - மதிப்பிலான சுழற்கலப்பையும்  13 பயனாளிகளுக்கு ரூ.19,241 - மதிப்பிலான கைத்தெளிப்பான்களையும், சிவகாசி  வட்டாரத்தில் 13 பயனாளிகளுக்கு ரூ.16,185 - மதிப்பிலான கைத்தெளிப்பான்களையும், வெம்பக்கோட்டை வட்டாரத்தில் 1 பயனாளிக்கு ரூ.97,752 - மதிப்பிலான சுழற்கலப்பையும், 1 பயனாளிக்கு ரூ.4480 - மதிப்பிலான சோலார் விளக்கு பொறியும், விருதுநகர் வட்டாரத்தில் 9 பயனாளிகளுக்கு ரூ.40,320 - மதிப்பிலான விளக்கு பொறிகளையும், அருப்புக்கோட்டை வட்டாரத்தில் 10 பயனாளிகளுக்கு ரூ.12,450 - மதிப்பிலான விளக்கு பொறிகளையும், காரியாபட்டி வட்டாரத்தில் 6 பயனாளிகளுக்கு ரூ.13,582 - மதிப்பிலான கைத்தெளிப்பான்களையும், நரிகுடி வட்டாரத்தில் 5 பயனாளிகளுக்கு ரூ.6225 - மதிப்பிலான கைத்தெளிப்பான்களையும், 1 பயனாளிக்கு ரூ.1,01,560 - மதிப்பிலான சோலார் விளக்கு பொறியும், 1 பயனாளிக்கு ரூ.1,69,320 - மதிப்பிலான பவர் டில்லரையும் மொத்தம் 82 பயனாளிகளுக்கு ரூ.6,35,348 - மதிப்பிலான வேளாண் கருவிகளை ரூ.2,29,107 - மானியத்தில் பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம்,  வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து