காதல் திருமணம் செய்த தம்பதி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம்

செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2018      திண்டுக்கல்
dgllover 7 2 18

திண்டுக்கல், - திண்டுக்கல் அருகே காதல் திருமணம் செய்த தம்பதி பாதுகாப்பு கேட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
திண்டுக்கல் அருகிலுள்ள பெரியகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன்(24). தனியார் மில்லில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா(20). இவர் தேனியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இருவரும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்தனர். இந்த விபரம் ஹேமலதாவின் பெற்றோருக்கு தெரியவரவே எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். தனது மகளை கடத்திச் சென்று விட்டதாக ஹேமலதாவின் பெற்றோர் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் தங்களை தேடுவதை அறிந்ததும் காதல் தம்பதி வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் சேர்ந்து வாழ எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என்று இரு தரப்பு பெற்றோரிடமும் எழுதி வாங்கிக்கொண்டனர். இதனையடுத்து காதலர்கள் அங்கிருந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து