முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கலெக்டர் பிரசாந்த் மு. வடநேரே, ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2018      கடலூர்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கலெக்டர் பிரசாந்த் மு. வடநேரே, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வு

 இந்த ஆய்வின்போது விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலகத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை கடலூர் விற்பனை குழு சார்பில் நடைபெற்ற விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஒருங்கிணபை;புக் கூட்டத்தில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே,, விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் தமிழ்நாடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல்கொள்முதல் மற்றும் விற்பனை குறித்து கலந்தாலோசனை செய்தார். அதன் பின்னர் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து கேட்டறிந்து, குறைபாடுகள் மற்றும் விவசாயிகளுக்கு வேண்டிய அடிப்படைவசதிகள் மற்றும் குடிநீர் வசதிகளை செய்து தருவதற்கு இணை இயக்குநர் (வேளாண்மை), ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலர்கள் ஆகியோருக்கு அறிவுரை வழங்கினார். மேலும் இந்த ஆய்வின்போது கலெக்டர் பிரசாந்த் மு. வடநேரே, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது. கடலூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் நெல் சாகுபடி அதிகளவில் செய்யப்பட்டுள்ளது. விருத்தாசலம் ஒழங்குமுறை விற்பனை கூடத்தில் 1,30,000 மூட்டைகள் வரத்து வரப்பெற்றுள்ளது. இன்றைய தினம் நடைபெற்ற ஒருங்கிணைப்பு கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் கலந்தாலோசனை செய்து அவர்களின் குறைபாடுகள் கேட்டறியப்பட்டது. மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வருகைபுரியும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில கோரிக்கைகள் நிரந்தரமான முறையிலும், சில கோரிக்கைகள் தற்காலிக அளவிலும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வருகின்ற நெல் மூட்டைகளை இருப்பு வைப்பதற்கு தேவையான இட வசதி செய்து தரவும், எடை போடுவதற்கு தராசு எண்ணிக்கையினை அதிகரிக்க செய்யவும், தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். கடலூர் மாவட்டத்தில் 64 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் உள்ளன. 64 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் செயல்பட ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. 22 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 86 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திரா, இணை இயக்குநர் (வேளாண்மை) நாட்ராயன், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருபாகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், வட்டாட்சியர் ஸ்ரீதரன், விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம், செயலாளர் தேவேந்திரன் மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உட்பட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து