முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்திருந்ததை கண்டறிந்து 40 மாணவர்களின் உயிரை காத்த துப்புரவுப் பணியாளர் : கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2018      நாகப்பட்டினம்
Image Unavailable

 

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியம் மருதூர் வடக்கு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் சுமார் 40 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

துப்புரவுப் பணி

 இப்பள்ளியில் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிபவர் நாகம்மாள். கடந்த 25.01.2018 அன்று காலை பணிக்கு வந்த போது பள்ளி மாணவ மாணவிகள் பயன்படுத்தும் சில சமூக விரோதிகள் குடிநீர் தொட்டியில் விஷம் கலந்திருந்ததை கண்டறிந்து உடன் பள்ளி ஆசிரியர்களிடம் கூறி உடனடியாக விஷம் கலந்த குடிநீரை அப்புறப்படுத்தினர்.

 இதனால் அப்பள்ளியில் பயிலும் 40 மாணவர்களும் அந்த நீரை பயன்படுத்தும் முன் தடுக்கப்பட்டு உரிய நேரத்தில் காப்பாற்றப் பட்டனர். பள்ளியின் துப்புரவுப் பணியாளரான நாகம்மாள் என்பவரது இந்த செயலை அறிந்து மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து