கவரப்பேட்டையில் ரேஷன் கடை திறப்பு விழா

செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2018      திருவள்ளூர்
G pundi

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் புதிதாக பகுதி நேர ரேஷன் கடை செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது. கவரப்பேட்டை பகுதியில் சுமார் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் இங்குள்ள தெலுங்கு பகுதியில் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 1 கி.மீ தொலைவில் உள்ள கவரப்பேட்டை பஜார் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு ரேஷன் பொருட்களுக்காக செல்ல வேண்டி உள்ளது.

நீண்ட வரிசை

 இதனால் மேற்கண்ட கடையில் பொருட்களை வாங்க நீண்ட வரிசையில் பொதுமக்கள் சில மணி நேரம் கூட நின்று பொருட்களை வாங்க நேரிடுகிறது. அதே போல இங்கு பணி செய்யும் பணியாளர்களும் பெரிதும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு அப்பகுதி மக்கள் கொண்டு சென்றனர். தொடர்ந்து இது குறித்து இப்பகுதியை சேர்ந்த கும்மிடிப்பூண்டி நிலவள வங்கி தலைவரும், அதிமுக பொதுக்குழு உறுப்பினருமான அபிராமன் உள்ளிட்டோர் வட்ட வழங்கல் அதிகாரி உள்ளிட்டோரிடம் முறையிட்டனர்.

தொடர்ந்து கவரப்பேட்டை தெலுங்கு காலனி பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்கப்பட்டடது. இந்நிலையில் இந்த கடையின் திறப்பு விழாவிற்கு கும்மிடிப்பூண்டி நிலவள வங்கி தலைவரும், அதிமுக பொதுக்குழு உறுப்பினருமான அபிராமன் தலைமை தாங்கினார். மாவட்ட அதிமுக இலக்கிய அணி செயலாளர் கோவி.நாராயணமூர்த்தி, அதிமுக நிர்வாகிகள் நாகமுத்து, வெங்கடகிருஷ்ணன், பிரசன்னா கவரப்பேட்டை ஊராட்சி செயளாலர் சாமுவேல் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து ரேஷன் கடை திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்பட துவங்கியது. தங்கள் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரேஷன் கடை திறக்கப்பட்டதற்கு இப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து