உலக கோப்பைக்கான தகுதிச் சுற்றில் விளையாட விரும்பவில்லை: நரைன்

செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2018      விளையாட்டு
Narine 2018 2 6

உலக கோப்பைக்கான தகுதிச் சுற்றில் விளையாட விரும்பவில்லை என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரைன் தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன். இவர் உள்பட பல வீரரகள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட விரும்பவில்லை. ஐபிஎல் போன்ற டி20 லீக் தொடரில் விளையடுவதற்குத்தான் ஆசைப்படுகிறார்கள். இதற்கு பணம் அதிக அளவில் கிடைப்பதுதான் காரணம் என்ற குற்றச்சாட்டு பொதுவாக வைக்கப்படுகிறது.
திரும்ப விரும்பவில்லை...

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுவதுதான் அல்டிமேட் கோல் என்று சுனில் நரைன் கூறியுள்ளார். மேலும், உலகக்கோப்பைக்கான தகுதிச் சுற்றில் விளையாட விரும்பவில்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து சுனில் நரைன் கூறுகையில் ‘‘நான் உடனடியாக சர்வதேச கிரிக்கெட்டிற்கும், 50 ஓவர் போட்டிக்கும் திரும்ப விரும்பவில்லை. நான் இன்னும் சில 50 ஓவர்கள் போட்டியில் விளையாட வேண்டும் என நினைக்கிறேன். ரீஜினல் சூப்பர்50 தொடரில் டிரினிடாட் அண்டு டொபாகோ அணிக்காக நான் விளையாடி வரும் நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது என்னுடைய சொந்த திறன். சுய நம்பிக்கை. இதன்மூலம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன் என்றார்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து