வைரம் பதித்த தங்கநகையை விற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றிய கடை உரிமையாளர் கைது

செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2018      சென்னை

சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த அஜய் () அருண்குமார், என்பவர், எண்.24, பேஸ்மென்ட் காசி ஆற்காடு, கூ.சூ. சாலை, தி.நகர், சென்னை, என்ற முகவரியில் முத்து மாளிகை என்ற பெயரில் கவரிங் நகைக் கடை நடத்தி வருகிறார்.

தங்க நகை

ஈரோடு மாவட்டம், அரியன்புதூர், பாலகாட்டூர், எண்.119 என்ற முகவரியைச் சேர்ந்த பாலகிருஷ்ணகுமார் என்பவரின் மைத்துனர் ஆனந்த் என்பவர் வங்கியில் ஏலம் விடும் தங்க நகைகளை ஏலம் எடுப்பது வழக்கம். அது போல ஆனந்த் வங்கியில் ஏலம் விட்ட சுமார் 29 கிராம் எடை கொண்ட வைரக்கல் பதித்த தங்க நெக்லஸ் ஒன்றை ஏலம் எடுத்தார். அந்த நகையை விற்பதற்காக பாலகிருஷ்ணகுமார் கடந்த 01.2.2018 அன்று மேற்படி கவரிங் நகைக்கடை உரிமையாளர் அஜய் () அருண்குமாரிடம் கொடுத்து விற்க சொன்னார். அதன்பேரில், அஜய் வைரக்கல் பதித்த நகையை வாங்கிக் கொண்டு மதியம் வரச் சொன்னார்.

பின்னர், பாலகிருஷ்ணகுமார் மதியம் அஜயிடம் சென்று நகைக்கான பணத்தை கேட்டபோது, நீங்கள் கொடுத்த நகையை எனது உதவியாளர் கொண்டு சென்றபோது அது திருட்டு நகையென போலீசார் அந்நபரை பிடித்து வைத்துக் கொண்டு நகையை எடுத்துக் கொண்டதாக அஜய் கூறி, தனது செல்போனில் உதவியாளர் ஓரிடத்தில் அமர்ந்திருப்பது போன்ற படத்தை காண்பித்துள்ளார். இதனால் அஜய் தன்னை ஏமாற்றியதையறிந்த பாலகிருஷ்ணன், பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பாண்டிபஜார் குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மேற்கொண்ட விசாரணையில், அஜய், மேற்படி பாலகிருஷ்ணகுமார் கொடுத்த தங்க நகையை அபகரிக்க திட்டமிட்டு, அவரது உதவியாளரிடம் நகையை கொடுத்து போலீசார் பிடித்தது போல பொய் கூறி ஏமாற்றியதும், பின்னர் அந்த நகையை வேறொருவரிடம் விற்றதும் தெரியவந்தது.அதன்பேரில், குற்றவாளி அஜய் () அருண்குமார், என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து மேற்படி வைரக்கல் பதித்த தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து