முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் கட்சி செய்த பாவங்களுக்கு, மக்கள் விலை கொடுத்து கொண்டிருக்கிறார்கள் பிரதமர் மோடி குற்றச்சாட்டு

புதன்கிழமை, 7 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்க நடைபெற்றது தேர்தலா இல்லை முடிசூட்டும் விழாவா? என பாராளுமன்றத்தில் பேசும் போது பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டதொடரில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார் அப்போது அவர் கூறியதாவது:-
நாட்டை துண்டு துண்டாக்கியது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் கட்சி செய்த பாவங்களுக்கு, மக்கள் விலை கொடுத்து கொண்டிருக்கிறார்கள். மற்ற நாடுகளுக்கு இணையாக இந்தியா வளர்ந்து வருகிறது. கடந்த காலத்தில் காங்கிரஸ் என்ன விதைத்ததோ அதனையே தற்போது அறுவடை செய்கிறது. நேர்மையான ஆட்சியை காங்கிரஸ் நடத்தியிருந்தால், இந்தியாவின் நிலையே வேறு.

இந்திய இளைஞர்கள் எதையாவது சாதிக்க வேண்டுமென ஆசைப்படுகிறார்கள். அவர்களுக்கு வழி அமைத்து கொடுக்கும் அரசாக நாங்கள் இருக்கிறோம்.  மக்களுக்கான திட்டங்களை அறிவிப்பதிலும், அதை சரியான நேரத்தில் நிறைவே ற்றுவதிலும் மத்திய அரசு சிறப்பாக செயல்படுகிறது.
- நரேந்திர மோடி

சர்தார் வல்லபாய் பட்டேல் பிரதமராக இருந்திருந்தால், காஷ்மீர் பிரிவினை ஏற்பட்டிருக்காது. சர்தார் வல்லபாய் பட்டேலை பிரதமராக விடாமல் தடுத்தது யார்? ஜனநாயகம் வளர அவைகளில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடாமல், விவாதத்தில் ஈடுபட வேண்டும். ஒரு குடும்பத்தின் வளர்ச்சியில் மட்டுமே காங்கிரஸ் அக்கறை காட்டியது.  சாமானிய மக்களின் உணர்வுகளை எதிர்க்கட்சிகள் காயப்படுத்துகின்றன.  பிரதமராக இருந்த மன்மோகன் சிங் நாட்டின் வளர்ச்சிக்கு என்ன செய்தார்.

மாநிலங்களை நிராகரித்த காங்.
ஆந்திர மக்களின் உணர்வுகளோடு காங்கிரஸ் கட்சி விளையாடியது.  மாநிலங்களை பிரிப்பதில் காங்கிரஸ் அரசு சரியான நடைமுறையை பின்பற்றவில்லை .தமிழகம், கேரளா, ஆந்திர மாநிலங்களின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் கட்சி என்ன செய்தது.  காங்கிரஸ் கட்சியின் அலட்சியத்தால், ஆந்திர மாநில எம்.பிக்கள் தனி அந்தஸ்து கோருகின்றனர். கேரளாவில் காங்கிரஸ் எவ்வாறு செயல்பட்டது,  பஞ்சாபில் அகாலி தளம்  எப்படி நடத்தப்பட்டது? தமிழ்நாட்டில் எப்படி அவர்கள் நடந்துகொண்டார்கள்?   காங்கிரஸ் ஏன் பல மாநிலங்களை தங்கள் விருப்பப்படி நிராகரித்தது. இது ஜனநாயகத்தின் மீது  எந்த உறுதியும் இல்லாதது.

ஜனநாயகம் என்பது காங்கிரஸ், நேரு தந்தது அல்ல. நமது பாரம்பரியத்தில் நமது நரம்புகளில் ஜனநாயகம் உள்ளது. நீங்கள் ஜனநாயகம் பற்றி பேசலாமா...? ஐதராபாத் விமான நிலையத்தில் இறங்கிய அவரது சொந்த கட்சியின் தலித் முதல்வரை  ராஜீவ் காந்தி  பகிரங்கமாக அவமானப்படுத்தியுள்ளார். என்.டி.ராமாராவ் (ராஜீவ் காந்தியால்) அவமதிக்கப்பட்டார், அதனால் அவர் தெலுங்கு தேசத்தை உருவாக்கினார்.  நீங்கள் (காங்கிரஸ்) ஜனநாயகத்தை விரும்பவில்லை. எனவே தயவுசெய்து ஜனநாயகத்தின் படிப்பினைகளை எங்களுக்கு கற்பிக்க வேண்டாம்.

முடிசூட்டும் விழாவா?
90 முறைக்கு மேல் மாநில அரசாங்கங்களை அகற்றி சட்டத்தை தவறாக பயன்படுத்திய காங்கிரஸ், ஜனநாயகம் குறித்து பேசுவது வேடிக்கையாக உள்ளது. காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்க நடைபெற்றது தேர்தலா இல்லை முடிசூட்டும் விழாவா ? காங்கிரஸ் சரியாக பணியாற்றியிருந்தால் எங்களுக்கு இந்தளவு சுமை இருந்திருக்காது. யார் அரசாங்கத்திற்கு தலைமை தாங்கினாலும்  நடுத்தர வர்க்க இளைஞர்களின் அபிலாஷைகளுக்கு  எப்பொழுதும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இந்திய இளைஞர்கள் எதையாவது சாதிக்க வேண்டுமென ஆசைப்படுகிறார்கள். அவர்களுக்கு வழி அமைத்து கொடுக்கும் அரசாக நாங்கள் இருக்கிறோம்.  மக்களுக்கான திட்டங்களை அறிவிப்பதிலும், அதை சரியான நேரத்தில் நிறைவே ற்றுவதிலும் மத்திய அரசு சிறப்பாக செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து