தமிழகம், கேரளா, ஆந்திர மாநிலங்களின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் என்ன செய்தது? பார்லி.யில் பிரதமர் மோடி கேள்வி

புதன்கிழமை, 7 பெப்ரவரி 2018      இந்தியா
modi 2017 10 26

புதுடெல்லி,  தமிழகம், கேரளா, ஆந்திர மாநிலங்களின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் கட்சி என்ன செய்தது தென் மாநிலங்கள் மீது பிரதமர் மோடி அக்கறை காட்டி பேசினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார்.  பிரதமர் மோடியை பேசவிடாமல் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார் அப்போது அவர் கூறியதாவது:-

தடுத்தது யார்?


நாட்டை துண்டு துண்டாக்கியது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் கட்சி செய்த பாவங்களுக்கு, மக்கள் விலை கொடுத்து கொண்டிருக்கிறார்கள். மற்ற நாடுகளுக்கு இணையாக இந்தியா வளர்ந்து வருகிறது. கடந்த காலத்தில் காங்கிரஸ் என்ன விதைத்ததோ அதனையே தற்போது அறுவடை செய்கிறது. நேர்மையான ஆட்சியை காங்கிரஸ் நடத்தியிருந்தால், இந்தியாவின் நிலையே வேறு. சர்தார் வல்லபாய் பட்டேல் பிரதமராக இருந்திருந்தால், காஷ்மீர் பிரிவினை ஏற்பட்டிருக்காது. சர்தார் வல்லபாய் பட்டேலை பிரதமராக விடாமல் தடுத்தது யார்?

தனி அந்தஸ்து

ஒரு குடும்பத்தின் வளர்ச்சியில் மட்டுமே காங்கிரஸ் அக்கறை காட்டியது. சாமானிய மக்களின் உணர்வுகளை எதிர்க்கட்சிகள் காயப்படுத்துகின்றன. பிரதமராக இருந்த மன்மோகன் சிங் நாட்டின் வளர்ச்சிக்கு என்ன செய்தார். ஆந்திர மக்களின் உணர்வுகளோடு காங்கிரஸ் கட்சி விளையாடியது. மாநிலங்களை பிரிப்பதில் காங்கிரஸ் அரசு சரியான நடைமுறையை பின்பற்றவில்லை. தமிழகம், கேரளா, ஆந்திர மாநிலங்களின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் கட்சி என்ன செய்தது. காங்கிரஸ் கட்சியின் அலட்சியத்தால், ஆந்திர மாநில எம்.பிக்கள் தனி அந்தஸ்து கோருகின்றனர் என பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து