ஐ.நா.வில் மீண்டும் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தான்

வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018      உலகம்
united-nations-flag  2017 09 12

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் மீண்டும் எழுப்பியுள்ளது.

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம் அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், ஐ.நா.வுக்கான பாகிஸ்தானின் நிரந்தரப் பிரதிநிதி மலீஹா லோதி பேசியதாவது:
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் தீர்மானங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. வெகுசில தீர்மானங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. தமது சொந்தத் தீர்மானத்தையே வெற்றிகரமாக செயல்படுத்த முடியாத இந்தத் தன்மையானது, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஐ.நா. அமைப்பையே பலவீனமாக்குகிறது. எனவே, காஷ்மீர் விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் செயல்படுத்தப்படுவதை ஒரு குறிப்பிட்ட கால இடை வேளையில் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு மலீஹா லோதி தெரிவித்தார்.

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் 1948-ம் ஆண்டின் தீர்மானத்தின்படி, காஷ்மீரின் எதிர்காலத்தை தீர்மானிப்பது குறித்து அம்மாநில மக்களின் கருத்தை அறியும் வகையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி யான காஷ்மீரில் ஜனநாயக முறையில் நடைபெறும் தேர்தல்களில் அம்மாநில மக்கள் வாக்களித்து வரும்போது, பொது வாக்கெடுப்பு தேவையற்றது என்பது இந்தியாவின் கூற்றாகும்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து