கேப்டவுன் வாசிகளுக்கு இலவசமாக 10,000 மில்லியன் லிட்டர் தண்ணீரை திறந்து விட்ட விவசாயிகள் சங்கம்

வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018      உலகம்
cape-town 2018 01 08

கேப்டவுன்: தண்ணீர் பஞ்சத்தால் 'டே ஜீரோ'வை (தண்ணீர் முற்றிலும் தீர்ந்து போகும் நிலை) நோக்கிச் சென்று கொண்டிருந்த தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் வாசிகளுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி வந்துள்ளது.

விவசாயிகள் அமைப்பான க்ரோன்லேண்ட் நீர் பயனர் சங்கத்தினர் சுமார் 10,000 மில்லியன் லிட்டரை கேப் டவுனுக்கு இலவசமாக திறந்துவிட்டுள்ளனர். இந்த விவசாய அமைப்பின் பாராட்டுக்குரிய செயலால் கேப் டவுன் வாசிகளின் தண்ணீர் பற்றாக்குறைக்கு தற்காலிகமான தீர்வு கிடைத்துள்ளது.

இதுகுறித்து க்ரோன்லேண்ட் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி ஜோஹன் க்ரோன்லேண்ட் கூறிய போது, எங்களிடம் தண்ணீர் இருந்தது. ஏன் அடுத்த எல்லையில் தண்ணீர் தேவைப்படுபவர்களுக்கு கொடுக்கக் கூடாது என்று நினைத்தோம். அதனால் கேப் டவுனுக்கு சுமார் 10,000 மில்லியன் லிட்டர் தண்ணீரை திறந்து விட்டிருக்கிறோம். எங்கள் பகுதியில் மழை பெய்யாவிட்டால் நாங்களும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர் நோக்குவோம் என்றார்.


க்ரோன்லேண்ட் விவசாயிகள் அமைப்பு திறந்துவிட்டுள்ள தண்ணீர் பல சிறிய அணைகளைக் கடந்து கேப் டவுனை இன்னும் சில தினங்களில் சென்றடையவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து