சவூதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு

வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018      உலகம்
8  PICT  6 2018 01 08

ரியாத்: சவூதி அரேபியா சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அடில் அல்-ஜூபியரை ரியாத் நகரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம், எரிசக்தி, ராணுவம், உள்நாட்டுப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இதுதவிர, பிராந்திய நிலவரம் குறித்தும், சர்வதேச நிலவரம் குறித்தும் இருவரும் விவாதித்தனர்.

முன்னதாக, வெளிநாடுகள் வாழ்இந்தியர்கள் மத்தியில் சுஷ்மா சுவராஜ் உரையாற்றினார். அந்தக் கூட்டத்தில், சவூதி அரேபியாவில் நன்மதிப்பைப் பெற்றுள்ள இந்தியச் சமூகத்தினருக்கு அவர் நன்றி தெரிவித்தார். மேலும், சவூதி அரேபியாவில் சிறப்பான முறையில் பணியாற்றி வரும் இந்தியத் தூதரகத்துக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.


பிரதமர் மோடி, கடந்த 2016-ஆம் ஆண்டு சவூதி அரேபியாவுக்கு வந்தார். அதன்பிறகு, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு வலுவடைந்தது. சவூதி அரேபியாவில் 30 லட்சம் இந்தியர்கள் வசிக்கிறார்கள். சீனா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றுக்கு அடுத்தப்படியாக, இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக சவூதி அரேபியா விளங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து