ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடந்தது

வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018      ராமநாதபுரம்
Collecto Special Grievance 8 2 18

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்,  மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற கலெக்டர் சுய  தொழில் துவங்குவதற்காக 6 பயனாளிகளுக்கு தலா ரூ.10ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.60ஆயிரம்  மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.
 ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளுக்கு தீர்வு காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாற்றுத்திறனாளிகள் வருகை தந்தனர். முகாமிற்கு வருகை தந்த மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மொத்தம் 124 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று, அம்மனுக்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டது.  அதன்பின்னர் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் அவர்களது கோரிக்கை மனுக்களை அவரவர் இருக்கைகளுக்கு நேரடியாகச் சென்று பெற்றார்.  கோரிக்கை மனுக்களைப் பொறுத்த வரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை வேண்டுதல், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் வேண்டுதல், சுயதொழில் துவங்குவதற்கு மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவிகள் வேண்டுதல் உள்ளிட்ட மனுக்கள் அதிகளவில் வரப்பெற்றன.  மனுக்களைப் பெற்ற மாவட்ட  கலெக்டர் அம்மனுக்கள் மீது காலதாமதமின்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ள  சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அறிவுறுத்தினார். 
 மேலும், மாவட்ட கலெக்டர் இம்முகாமில் சுயதொழில் துவங்க வங்கி கடனுதவி வழங்கிட வேண்டி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் பிணையம் ஏதுமின்றி சிறு தொழில் துவங்குவதற்கு கடனுதவி வழங்குவதற்கான விண்ணப்பங்களை இம்முகாம்களிலேயே சம்பந்தப்பட்ட மனுதாரர்களிடமிருந்து பூர்த்தி செய்து வங்கிகளுக்கு அனுப்பி வைத்திட வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.  அதனடிப்படையில் கடனுதவி வேண்டி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு முத்ரா திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு இம்முகாம்களிலேயே சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அனுப்பி வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுய  தொழில் துவங்குவதற்காக 6 பயனாளிகளுக்கு தலா ரூ.10ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.60ஆயிரம் மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார். இக்கூட்டத்தில் பரமக்குடி சார் ஆட்சியர் பி.விஷ்ணுசந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சி.தங்கவேல், உதவி ஆட்சியர் (பயிற்சி) பி.மணிராஜ், முன்னோடி வங்கி மேலாளர் சியாமளாநாதன், மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் ப.மாரியம்மாள் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டன

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து