ராகுலும் எனக்கு தலைவர்தான் இதில் எந்த சந்தேகமும் இல்லை: சோனியா காந்தி சொல்கிறார்

வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018      இந்தியா
sonia-rahul 2017 7 2

புது டெல்லி, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி எனக்கும் தலைவர்தான் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் கிடைத்துள்ளார். உங்களில் ஒருவர். அவருக்கு எல்லா நலன்களும் கிடைக்க வாழ்த்துகிறேன். இப்போது எனக்கும் அவர்தான் தலைவர். இதில் எந்த சந்தேகமும் இல்லை என்று ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் கிடைத்துள்ளார். உங்களில் ஒருவர். அவருக்கு எல்லா நலன்களும் கிடைக்க வாழ்த்துகிறேன். இப்போது எனக்கும் அவர்தான் தலைவர். இதில் எந்த சந்தேகமும் இல்லை. -சோனியா காந்தி

நாட்டில் உள்ள புலனாய்வு அமைப்புகள் அனைத்தையும், அரசியல் பழிவாங்கும் காரியத்துக்காகவே மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல்களில் சிறப்பாக உழைத்த கட்சித் தொண்டர்களுக்கு எனது பாராட்டுகள். தொடர்ந்து காங்கிரஸ் சிறப்பாக பணியாற்றி வருகிறது என்பதையே கடந்த தேர்தல்கள் காட்டுகின்றன. விரைவில் மிகப்பெரிய மாற்றம் வரவிருப்பதையே இவை எடுத்துக்காட்டுகின்றன என்றும் சோனியா காந்தி தெரிவித்தார்.

2019ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு தயாராகுங்கள் என்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள சோனியா, 2014ம் ஆண்டு தோல்வி, சந்தேகமே இல்லாமல் மிகப்பெரிய பின்னடைவுதான் என்றும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து