கர்நாடக சட்டசபை தேர்தல்: பகுஜன், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி

வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018      இந்தியா
karnataka map 2018 02 08

பெங்களூர், கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளும், கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளன.

இந்த கூட்டணி 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் தொடரும் என்று பகுஜன் சமாஜ் தலைவர் சதீ சந்திர மிஸ்ரா மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை தலைவர் டேனிஷ் அலி இருவரும் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தனர். கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறும் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து