ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் கைது: பிப்-16 ஆம் தேதி வரை சிறைக்காவல்.

வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018      ராமநாதபுரம்
rmsfisherman 8 2 18

  ராமேசுவரம்,- கச்சத்தீவு கடல்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 1 விசைப்படகை அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர்  சிறைப்பிடித்து படகிலிருந்து 7  மீனவர்களை  புதன் கிழமை நள்ளிரவில் கைது செய்தனர்.

 ராமேசுவரம் பகுதியிலிருந்து புதன் கிழமை காலையில் 400 க்கும் மேற்ப்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரக்குத்து மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.இவர்கள்  கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்துள்ளனர்,அப்போது அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர்  ராமேசுவரம்  பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரது படகையும் அதில் சென்ற மீனவர்கள் நாகராஜ், ஆறுமுகம், ரவி,  படகு உரிமையாளர் நாகராஜன், எமிரேட்ஸ், கார்த்திக், வரகுண பாண்டியன் ஆகிய 7 மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்தனர்.பின்னர் மீனவர்களை நடுக்கடலில் விசாரணை செய்து கைது செய்தனர்.அதந் பின்னர் 7 மீனவர்களையும் தலைமன்னாரில் உள்ள கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று அங்கு உயர் அதிகாரிகள்  விசாரணை மேற்கொண்டனர்.அதன் பின்னர் வியாழக்கிழமை  காலையில் மன்னார்   காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு போலீஸார் 7 மீனவர்கள் மீதும் கடல் வளத்தை அழிக்கூடிய தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை வைத்து மீன்பிடித்தாகவும், எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக வழக்கு பதிந்து  தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.அங்கு மீனவர்களை விசாரணை செய்த நீதிபதி ஹயஸ்பல்டோனா     மீனவர்களை பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி வரை சிறைக்காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து