நிர்பயா நிதியில் இருந்து சதாப்தி, ராஜ்தானி ரயில்களில் கேமிராக்கள் பொருத்த முடிவு

வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018      இந்தியா
train 2017 01 24

புது டெல்லி, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, சதாப்தி, ராஜ்தானி, துரந்தோ ரயில்களில் ஒவ்வொரு பெட்டியிலும் 4 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்துக்கான ஒட்டுமொத்த நிதியும், நிர்பயா நிதியில் இருந்து ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட உள்ளது. ராஜ்தானியின் 26 ரயில்கள், சதாப்தியின் 26 ரயில்கள், 18 துரந்தோ ரயில்கள் ஆகியவற்றில் இந்தவசதி விரைவில் செய்யப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து வடக்கு ரயில்வேயின் பொது மேலாளர், விஷ்வேஷ் சவுபே நிருபர்களிடம் கூறுகையில், அனைத்து சதாப்தி, ராஜ்தானி, துரந்தோ ரயில்களின் ஒவ்வொரு பெட்டியிலும் 4 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படும். இரு கேமிராக்கள் ரயில் பெட்டியின் நுழைவாயிலிலும், 2 கேமிராக்கள் பெட்டியின் ஓரத்திலும் பொருத்தப்படும். இந்த திட்டத்துக்கான பணம் நிர்பயா நிதியில் இருந்து கிடைக்கிறது எனத் தெரிவித்தார்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து