கோர்ட் வாதங்களில் உள்ளூர் மொழியை பயன்படுத்தலாம்: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கருத்து

வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018      இந்தியா
Venkaiah Naidu 2017 01 10

புது டெல்லி, உள்ளூர் மொழிகளை ஐகோர்ட்டுகளில் நடைபெறும் வாதத்தில் தகுந்த சூழ்நிலைகளில் பயன்படுத்தலாம் என்று துணை ஜனாதிபதியும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு கூறினார்.

மாநிலங்களவையில் நடந்த நேரமில்லா நேரத்தின்போது துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு பேசியதாவது,
தகுந்த சூழ்நிலைகளில் ஐகோர்ட் வாதங்களில் உள்ளூர் மொழியைப் பயன்படுத்தலாம். இந்த வழியில் பயணித்தால் அது சிறந்ததாக இருக்கும். இந்த விஷயத்தில் அனைவரிடையேயும் கருத்தொற்றுமை வேண்டும். அனைவரும் இதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே இது சாத்தியமாகும் என்றார்.

தகுந்த சூழ்நிலைகளில் ஐகோர்ட் வாதங்களில் உள்ளூர் மொழியைப் பயன்படுத்தலாம். இந்த வழியில் பயணித்தால் அது சிறந்ததாக இருக்கும். இந்த விஷயத்தில் அனைவரிடையேயும் கருத்தொற்றுமை வேண்டும். அனைவரும் இதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே இது சாத்தியமாகும். - வெங்கையா நாயுடு

இதைத் தொடர்ந்து பாராளுமன்றம், சட்டசபைகளஇல் மகளிருக்கு இடஒதுக்கீடு விவகாரத்தில் நல்ல முடிவை எடுக்கவேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ரஞ்சனி பாட்டீல் கோரிக்கை விடுத்தார். இதற்கு வெங்கய்ய நாயுடு கூறியதாவது,

ரஞ்சனி பாட்டீல் எழுப்பிய கோரிக்கை நல்ல கோரிக்கையாகும். இது ஒட்டுமொத்த தேசத்துக்கு எதிராக எழுந்த சவாலாக உள்ளது. இந்த விஷயத்தில் நாங்கள் உறுதிமொழி கொடுத்துள்ளோம். அதை விரைவில் நிறைவேற்றுவோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து