தமிழகத்தில் 10-ம் தேதி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பு

வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018      தமிழகம்
chennai-rains 2017 11 4

சென்னை, தமிழகத்தின் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் வரும் 10-ம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

காற்றின் சீரான தொடர்ச்சி விடுபட்டதன் காரணமாக தமிழகத்தின் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில்  7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் இந்த மழை இருக்கும். சாதாரண மழையாக இருக்காமல், திடீரென இடி, மின்னல் கூடிய மழையாக பெய்யலாம். அடுத்த வரும் 2 அல்லது 3 நாட்களுக்கு கீழ் குறிப்பிட்ட மாவட்டங்களில் மழை இருக்கும்.


கோவை, கன்னியாகுமரி, திருப்பூர், சேலம், திருநெல்வேலி(மலைப்பகுதி), ஈரோடு, நாமக்கல், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை, நீலகிரி, சிவகங்கை, மதுரை, விருதுநகர், மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை பகலில் மேமூட்டமாகக் காணப்படும், லேசான மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

காற்றுவீசம் திசையின் திடீர் மாறுதல், திசை மாற்றம் காரணமாக இந்த மழை இருக்கும். வங்காள விரிகுடா கடலில் இருந்த கிழக்கு முகமாக வீசும் காற்று திசை மாறி அரேபியக் கடல் பகுதியை திரும்புவதால் இந்த மழை இருக்கிறது. இந்த நிலைத்தன்மையற்ற காற்றின் திசைமாற்றத்தின் காரணமாகவே மழை பெய்கிறது. இந்த மழை பெரும்பாலும் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பெய்யவே அதிகமான வாய்ப்புகள் உண்டு.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து