அறிவிப்புப் பலகையில் தமிழ், இந்தி நீக்கமா? சென்னை விமான நிலையம் மறுப்பு

வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018      தமிழகம்
chennai airport

சென்னை, விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு குறித்த அறிவிப்புப் பலகையில் தமிழ், இந்தி அறிவிப்புகள் நீக்கப்பட்டதாக வெளியான செய்திகளை சென்னை விமான நிலையம் மறுத்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் வருகை, புறப்பாடு குறித்த அறிவிப்புப் பலகையில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய 3 மொழிகளும் ஒன்றன் பின் ஒன்றாக அறிவிப்பு வெளியாகும். காலை நேரங்களில் அதிகமான விமானங்கள் இயக்கப்படுவதால் 3 மொழிகளிலும் அறிவிப்புகள் வெளியிடுவதால் தாமதம் ஏற்படுவதாகவும், எனவே, காலையில் மட்டும், தமிழ் மற்றும் இந்தி அறிவிப்புகள் நீக்கப்படும் என்று சென்னை விமான நிலையம் அறிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

ஆனால், இந்த செய்தியில் உண்மையில்லை என்று சென்னை விமான நிலையம் தெரிவித்துள்ளது. இது குறித்து டுவிட்டர் பதிவில், சென்னை விமான நிலைய அறிவிப்புப் பலகையில் தமிழ், இந்தி அறிவிப்புகள் நீக்கப்பட்டதாக செய்தி வெளியானது போல, எந்த அறிவிப்பும் நீக்கப்படவில்லை. தொடர்ந்து தமிழ், இந்தி அறிவிப்புகள் வெளியிடப்பட்டே வருகின்றன. இதுபோன்ற செய்தி வெளியானதும், அனைத்துப் பகுதிகளிலும் சோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து