விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு ஆய்வு

வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018      விருதுநகர்
Virudhunagar district 8 2 18

விருதுநகர்,- விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு சட்டப் பேரவை மதிப்பீட்டுக்குழுத்தலைவர் நரசிம்மன் தலைமையில், மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள் ராஜா, .கனகராஜ், குமரகுரு, செல்வமோகன்தாஸ் பாண்டியன், தங்கம்தென்னரசு, நந்தகுமார், பரமசிவம், பாஸ்கர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தகுமார் ஆகியோர் நகராட்சிக்கு சொந்தமான பூங்கா பணிகள், பேராலி சாலையில் உள்ள முதியோர் இல்லம், சாத்தூர் வட்டத்தில் அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவியர் விடுதி, சாத்தூர் அரசு மருத்துவமனை, சிவகாசி வட்டம், மேலத்தாயில்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி, விஸ்வநத்தம்புதூர் கிராமத்தில் அங்கன்வாடி மையம், வடமலாபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது துணைச் செயலாளர்கள் சிவகுமரன், பாலகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் தினகரன் , மங்கள்ராமசுப்பிரமணி, இணை இயக்குநர் மரு.மனோகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கிருஷ்ணவேனி, திருநெல்வேலி நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் ராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் பத்மாசினி, வட்டாட்சியர்கள் பாலசுப்பிரமணியன், ஸ்ரீதர், முத்துலட்சுமி உட்பட பல்துறை அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து