வெங்கடாம்பட்டியில் 15 அடி உயர மகாத்மா காந்தி படம் திறப்பு விழா

வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018      திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் வெங்கடாம்பட்டி டிரஸ்ட் குழந்தைகள் இல்லங்களில்  15 அடி உயர மகாத்மா காந்தி திருவுருவப்பட திறப்பு விழா நடைபெற்றது

திறப்பு விழா

வெங்கடாம்பட்டி டிரஸ்ட் குழந்தைகள் இல்லத்தில் நடைபெற்ற விழாவிற்கு டிரஸ்ட் குழந்தைகள் இல்லத்தின் இயக்குனர் பூ.திருமாறன் தலைமை தாங்கினார். காந்தியவாதி தொழில் அதிபர் செங்கோட்டை வி.விவேகானந்தன் மகாத்மா காந்தியின் படங்களை திறந்து வைத்து பேசும் போது, குழந்தைகள் தங்களது வாழ்வில் தூய்மை, வாய்மை, தியாகம், கண்ணியம், சகிப்புத்தன்மை, நல் அரசியல் ஏற்பட டிரஸ்ட் குழந்தைகள்  மகாத்மாவின் புனித வாழ்வை நினைவு கூர்ந்து தங்கள் பணிகளை அன்றாடம் செய்யும் வண்ணம் இந்த பிரமாண்ட மகாத்மா காந்தியின் படங்கள் இங்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. குழந்கைள் அனைவரும் மகாத்மா காந்தியின் போதனைகளை படிப்பதோடு அதன் வழியில் வாழந்து காட்ட வேண்டும் என்றார்.விழாவில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மருத்துவர் மாதுரி மற்றும் விவியன் ஆகியோர் கலந்து கொண்டு மகாத்மாவின் சிறப்புக்கள் இந்தியாவில் இன்றும் உயிர்ப்புடன் திகழ்வதை கண்டு பெரிதும் பாராட்டினர். மேலும் இருவரும் மதுரையில் உள்ள காந்தி மியூசியத்திற்கு சென்று பார்வையிடவும். அங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள  மகாத்மா காந்தியின் தியாக ரத்தம் படிந்த துணியை பார்வையிட விருப்பம் தெரிவித்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை சாந்திதிருமாறன், ஏகலைவன், சுரே~ ஆகியோர் செய்திருந்தனர். டிரஸ்ட் குழந்தைகள் அனைவரின் முன்னிலையில் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். முடிவில் டிரஸ்ட் குழந்தைகள் இல்லத்தின் இயக்குனர் பூ.திருமாறன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து