தூத்துக்குடியில் விடுதி மாணவ, மாணவியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நாளை தொடங்குகிறது கலெக்டர் என்.வெங்கடேஷ் தகவல்

வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018      தூத்துக்குடி

தூத்துக்குடியில் விடுதி மாணவ, மாணவியர்களுக்காக "ஓடி விளையாடு" என்ற பெயரில் விளையாட்டு போட்டிகள் வருகிற 10 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெற உள்ளது என கலெக்டர் என்.வெங்கடேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு போட்டிகள்

 நமது மாநிலத்திலேயே முதல் முறையாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆதி திராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் & சிறுபான்மையினர் நல விடுதிகளில் தங்கி கல்வி கற்கும் மாணவ/மாணவியர்களுக்கு மட்டுமான விளையாட்டுப் போட்டியினை, தூத்துக்குடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் (தருவை மைதானம்) வருகிற 10.2.2018 மற்றும் 11.2.2018 (சனி மற்றும் ஞாயிறு) ஆகிய நாட்களில் "ஓடி விளையாடு" என்ற பெயரில் சிறப்பாக நடத்திட தூத்துக்குடி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்விளையாட்டு போட்டிகளில் அரசு விடுதிகளில் தங்கி பயிலும் 590 மாணவர்களும் 471 மாணவியர்களும் பங்கேற்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் கடந்த ஒரு வார காலமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வருகிற 10.2.2018 அன்று சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாணவ மாணவியர்களின் வண்ணமிகு அணிவகுப்பினை பார்வையிட்டு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ விளையாட்டு போட்டிகளை துவக்கி வைக்க உள்ளார். தடகள போட்டிகளான ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் மற்றும் கபடி, கோ-கோ, வளைபந்து, இறகுபந்து ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு நாளும் மாலை 4.30 மணிக்கு கலைநிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெறும். போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் உணவு, சுத்தமான குடிநீர், தேநீர், T-சர்ட் வழங்கப்பட உள்ளது. மேலும் சுகாதாரத் துறை மூலம் மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் சிறப்பம்சமாக அனைத்து பார்வையாளர்களுக்கும் இலவச அனுமதி சீட்டு வழங்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 5 பார்வையாளர்களுக்கு வெள்ளி நாணயம் பரிசு வழங்கப்படும். இந்த சிறப்பான விளையாட்டுப்போட்டியினை கண்டு களித்து மாணவ மாணவியர்களை உற்சாகப்படுத்துமாறு பொதுமக்களை அன்புடன் அழைக்கின்றோம்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து