கேரளாவை போல் கன்னியாகுமரியிலும் குழந்தைகள் திருட வீடுகளில் ஸ்டிக்கர்: தீவிர போலீஸ் பாதுகாப்பு

வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018      கன்னியாகுமரி
paraparappu sticker

கேரள மாநிலத்தில் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியது போல கன்னியாகுமரியிலும் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டிக்கர்

 கடந்த சில நாட்களாக முகநூல் பதிவுகளில் குழந்தைகளுள்ள வீடுகளில் மர்ம நபர்களால் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதும் அவ்வாறு அடையாளம் காணப்படும் வீடுகளிலிருந்து குழந்தைகள் கடத்தப்பட இருப்பதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருந்தன. குறிப்பாக திருவனந்தபுரம், எர்ணாக்குளம், காசக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை தந்தது. இந்நிலையில் கன்னியாகுமரி அருகேயுள்ள குண்டல் பகுதியை சேர்ந்த ஜெகன், குரூஸ், மாத்ருஸ், சமின், மணி, ஜான்சி, செல்வன் ஆகியோரது வீடுகளில் கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதனால் அப்பகுதியில் பயங்கர பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வீடுகளில் குழந்தைகள் இருப்பதாகவும் பெற்றோர்கள் வெளி வேலைக்கு சென்று வருபவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. இதனால் பொருட்கள் விற்பது போல் கிராமங்களுக்கு வரும் வடநாட்டுக்காரர்கள் குழந்தைகளை கடத்த திட்டமிட்டுள்ளது பரபரப்பாகியுள்ளது. கன்னியாகுமரியில் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து