திருச்சி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் கொடுக்கும் விண்ணப்பங்களில் அஞ்சல் வில்லை ஒட்டாமல் வழங்கலாம்

வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018      திருச்சி

 

திருச்சி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பொதுமக்கள் கொடுக்கும் விண்ணப்பங்கள் மற்றும் புகார்களில் அஞ்சல் வில்லை ஒட்டாமல் வழங்கலாம் என மாவட்ட கலெக்டர் கு.ராசாமணி. தெரிவித்துள்ளார்.

அஞ்சல் வில்லை

திருச்சி மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள், அடிப்படை வசதிகள் மற்றும் புகார்கள் தொடர்பாக மாவட்ட கலெக்டர், வருவாய்க் கோட்ட அலுவலர், வட்டாட்சியர் போன்ற அரசுத் துறை அலுவலர்களிடம் நேரடியாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களின் போது விண்ணப்பங்கள், கடிதங்களை அளித்து வருகின்றனர். அப்போது, விண்ணப்பம், கடிதத்துடன் ரூபாய் 5, 10, 20க்கான நீதிமன்ற அஞ்சல் வில்லைகளை ஒட்டி அளிக்கின்றனர்.

இந்த விண்ணப்பங்கள், கடிதங்களில் இது போன்ற அஞ்சல் வில்லைகளை ஒட்டி அனுப்பத் தேவையில்லை. எந்த ஒரு அரசு அலுவலகத்திற்கும் கோரிக்கைகள், புகார்களை கடிதமாக நேரிலோ, தபால் மூலமாகவோ அனுப்பும்போது கடிதத்தில் அஞ்சல் வில்லைகளை ஒட்டாமலே அனுப்பிடலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் கு.ராசாமணி. தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து