முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்கெட் கீப்பராக 400 வீரர்களை வீழ்த்தி டோனி புதிய சாதனை

வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018      விளையாட்டு
Image Unavailable

கேப்டவுன் : விக்கெட் கீப்பராக 400 வீரர்களை ஆட்டமிழக்க செய்த முதல் இந்தியர் என்ற பெருமையை டோனி பெற்றுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டுக்கு எதிரான 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், மூன்றாவது ஆட்டத்திலும் எளிதில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்திய இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி சதம் அடித்து  அசத்தினர்.  இந்த போட்டியில் கோலி, டோனி ஆகியோர் நிகழ்த்திய சுவாரஸ்யமான சாதனைகள் பின்வருமாறு:-

*முதல் ஆட்டத்தில் 112 ரன்கள் விளாசிய விராட் கோலி 160 ரன்கள் குவித்து மிரட்டினார். ஒரு நாள் போட்டியில் அவரது 34-வது சதம் இதுவாகும். இதில் கேப்டனாக அடித்த 12 சதங்களும் அடங்கும். இதன் மூலம் கேப்டனாக அதிக சதங்கள் அடித்த இந்தியர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பு சவுரவ் கங்குலி இந்திய அணியின் கேப்டனாக 11 சதங்கள் எடுத்ததே சாதனையாக நீடித்தது.

*ஒட்டுமொத்த அளவில் அதிக சதங்கள் விளாசிய கேப்டன்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங் (22 சதம்), தென்ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் (13 சதம்) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் கோலி இருக்கிறார்.

*தென்ஆப்பிரிக்க மண்ணில், தனிநபராக அதிகபட்ச ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சிறப்பையும் கோலி பெற்றார். அதே சமயம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய வீரர் ஒருவரின் 2-வது அதிகபட்சமாக இது பதிவானது. 2010-ம் ஆண்டு குவாலியரில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் 200 ரன்கள் எடுத்து முதலிடம் வகிக்கிறார்.

*தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆயிரம் ரன்களை கடந்த இந்தியர்களின் வரிசையில் 5-வது வீரராக விராட் கோலி (23 ஆட்டத்தில் 1,029 ரன்) இணைந்துள்ளார்.

*கேப்டவுன் மைதானத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம் அடித்த முதல் இந்தியர் கோலி தான். இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இங்கு சதம் எடுத்திருந்தாலும் அது கென்யாவுக்கு எதிராக (2003-ம் ஆண்டு) அடிக்கப்பட்டதாகும்.

*29 வயதான விராட் கோலி இந்த தொடரில் இதுவரை 318 ரன்கள் சேர்த்துள்ளார். இதன்மூலம் தென்ஆப்பிரிக்க மண்ணில் அந்த நாட்டு அணிக்கு எதிராக ஒரு நாள் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்ற மகிமையும் கோலிக்கு கிடைத்தது. 2001-02-ம் ஆண்டு தொடரின் போது ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங் 283 ரன்கள் எடுத்ததே இந்த வகையில் முந்தைய சிறப்பான செயல்பாடாக இருந்தது.

* சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பராக 400 வீரர்களை ஆட்டமிழக்க செய்த முதல் இந்தியர் என்ற பெருமையை டோனி பெற்றார். தென் ஆப்பிரிக்க  பொறுப்பு கேப்டன்  மார்கரமை ஸ்டம்பிங் செய்து வெளியேற்றியதன் மூலம், டோனி இந்த அரிய பெருமையை பெற்றார்.

* சர்வதேச அளவில்  400 விக்கெட்டுகளை வீழ்த்திய 4 வது விக்கெட் கீப்பர் என்ற பெருமையை டோனி பெற்றார். குமார் சங்கக்காரா, கில்கிறிஸ்ட், மார்க் பவுச்சர் ஆகியோர் 400 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளனர்.

*இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சங்கக்காரா 404 போட்டிகளில் விளையாடி 482 பேரை ஆட்டமிழக்கசெசெய்துள்ளார். கில்கிறிஸ்ட் 472 (284 போட்டிகள்)  பவுச்சர் 424 (295 போட்டிகள்) பேரையும் ஆட்டமிழக்கச்செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து