3-வது ஒரு நாள் போட்டி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி

வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018      விளையாட்டு
India hattrick win 2018 2 8

கேப்டவுன் : 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் தென்ஆப்பிரிக்காவை துவம்சம் செய்த இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசித்தது. ‘ரன் குவிக்கும் எந்திரம்’ என்று அழைக்கப்படும் கேப்டன் விராட் கோலி 160 ரன்கள் விளாசினார்.  இந்த வெற்றி மூலம் 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்தியா பேட்டிங் ...

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ் ஸ்டேடியத்தில் புதன்கிழமை பகல்-இரவு மோதலாக நடந்தது. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. தென்ஆப்பிரிக்க அணியில் குயின்டான் டி காக், ‌ஷம்சி, மோர்னே மோர்கல் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஹென்ரிச் கிளாசென், பெலக்வாயோ, நிகிடி சேர்க்கப்பட்டனர். இதில் கிளாசென், நிகிடி முதல் முறையாக ஒரு நாள் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தனர்.‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ராம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி, விராட் கோலியின் (160 ரன்கள்) அபார ஆட்டத்தின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில்  6 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் குவித்தது. இந்த மைதானத்தில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

304 ரன்கள் இலக்கு...

அடுத்து 304 ரன்கள் இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்க அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் அம்லா (1 ரன்), பும்ராவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். இதன் பின்னர் கேப்டன் எய்டன் மார்க்ராமும், டுமினியும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். வேகப்பந்து வீச்சை திறம்பட எதிர்கொண்ட இவர்கள், முழங்கையை அதிகமாக பயன்படுத்தி சுழற்பந்து வீசக்கூடிய யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் வந்ததும் மறுபடியும் தகிடுதத்தம் போட்டனர். ஸ்கோர் 78 ரன்களாக உயர்ந்த போது, மார்க்ராம் (32 ரன்) குல்தீப் யாதவின் பந்து வீச்சில் டோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அடுத்து வந்த ஹென்ரிச் கிளாசென் (6 ரன்), டுமினி (51 ரன்) இருவரும் சாஹலின் சுழலுக்கு இரையானார்கள். அபாயகரமான வீரர் டேவிட் மில்லர் 25 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

179 ரன்களுக்கு ...

இந்த வீழ்ச்சியில் இருந்து தென்ஆப்பிரிக்க அணியால் நிமிரவே முடியவில்லை. 40 ஓவர்களில் அந்த அணி 179 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் இரு ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்த இந்தியாவுக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் தலா 4 விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இந்தியா முன்னிலை...

6 போட்டிகள் கொண்ட இந்த ஒரு நாள் தொடரில் இந்தியா 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தென்ஆப்பிரிக்காவில், இந்திய அணி ஒரு தொடரில் மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும். இவ்விரு அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி வருகிற 10-ந்தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கிறது.

Kaatrin Mozhi Review | Jyothika | Vidharth | Lakshmi Manchu | Radha Mohan

Vanaraja Chicken | How to Start Vanaraja Chicken farming | வனராஜா வகை நாட்டுக்கோழி வளர்ப்பு சுலபமா

Great Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil

சுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways

Easy 30 minutes Milk kova recipe in Tamil | Milk kova seivathu eppadi | Paalkova recipe in Tamil

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து