மாலத்தீவு அரசியல் நெருக்கடி குறித்து டிரம்ப் - பிரதமர் மோடி ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018      உலகம்
modi-trump 2017 6 25

வாஷிங்டன், மாலத்தீவில் நிகழும் அரசியல் நெருக்கடி குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பும், இந்திய பிரதமர் மோடியும் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளனர். மேலும் இருவரும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து வெள்ளை மாளிகை தரப்பில், இரு நாட்டு தலைவர்களும் இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் ஒன்றாக பணியாற்றுவதற்கு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். மாலத்தீவில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிகள் குறித்தும், ஜனநாயகம், சட்ட விதிமுறைகள் மீதான மதிப்பு குறித்தும் கவலை தெரிவித்தனர். ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு மற்றும் தற்போதைய நிலைமை ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டன என்றும் வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் பேச்சுவார்த்தையில் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு குறித்து டிரம்ப் உறுதியளித்துள்ளார். மாலத்தீவில் முன்னாள் அதிபர் முகமது நசீத் உட்பட 9 பேரை விடுவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கடந்த 1-ம் தேதி உத்தரவிட்டது. ஆனால் அதை அதிபர் அப்துல்லா யாமீன் ஏற்க மறுத்து விட்டார். அத்துடன், கடந்த திங்கள் கிழமை முதல் அவசர நிலையை 15 நாட்களுக்குப் பிரகடனப்படுத்தியிருக்கிறார். அதனால் ராணுவத்துக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டன. வேறு எந்த அரசியலமைப்பும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதபடி முடக்கப்பட்டன.

அவசர நிலை பிரகடனப்படுத்திய சில மணி நேரங்களில் முன்னாள் அதிபர் அப்துல் கயூம், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அப்துல் சயீது மற்றும் நீதிபதி அலி ஹமீது ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இதனால் மாலத்தீவில் அரசியல் நெருக்கடியும், குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து