வடகொரியா மீதான பொருளாதாரத் தடைக்கு தென்கொரியா ஆதரவளிக்கும்: அமெரிக்கா துணை அதிபர் பேட்டி

வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018      உலகம்
South Korea US Vice President 2018 02 09 0

சியோல், வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகளுக்கு தென்கொரியா ஆதாரவளிக்கும் என்று அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் கூறியுள்ளார்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தென் கொரியா வந்திருக்கிறார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற பென்ஸ் இவ்வாறு தெரிவித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் மைக் பென்ஸ் கூறியதாவது, “ வடகொரியா மீது இன்னும் கூடுதலாக விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகளுக்கு தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் ஆதரவளிப்பார். ஏனெனில் வடகொரியா மீது விதிக்கபட்ட பொருளாதாரத் தடைகள்தான் வடகொரியா - தென்கொரியா இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு உதவியாதாக அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்.முன்னதாக தென்கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவுக்கு முன்னதாக வடகொரியாவில் வியாழக்கிழமை அந் நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் முன்பு ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.


கிம் II சதுக்கத்தின் மூன் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் அமெரிக்கா, தென்கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் "வடகொரிய அதிபர் கிம் ஜோங் நம் நாடு உலகம் தரம் வாய்ந்த ராணுவத்தை கொண்டுள்ளது” என்றார்.

முன்னதாக முன்னதாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆனால் எதிர்ப்புகளை சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணுஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன.

எனினும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் வடகொரியா மீது அமெரிக்கா மேலும் கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்கும் என்று எண்ணப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து