அரசு நிர்வாக முடக்கத்தை தவிர்க்க அமெரிக்காவில் 2 ஆண்டு பட்ஜெட் நிறைவேற்ற திட்டம்

வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018      உலகம்
whitehouse 2017-12 31

வாஷிங்டன், அரசு நிர்வாக முடக்கத்தை தவிர்க்க அமெரிக்காவில்  2 ஆண்டு பட்ஜெட் நிறைவேற்ற திட்டம் அமுல்படுத்தப்பட்டது.

அமெரிக்க செனட் அவையில் ‘செலவுக்கு நிதி ஒதுக்கீடு மசோதா’ மசோதா கடந்த ஜனவரி 20-ம் தேதி தோல்வி அடைந்ததால் அரசு நிர்வாகம் 3 நாட்கள் முடங்கியது. 435 பேர் கொண்ட பிரதிநிதிகள் அவையில் ஆளும் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. ஆனால் 100 பேர் கொண்ட செனட் அவையில் ஆளும் கட்சிக்கு 51 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். பட்ஜெட் மசோதாவை நிறைவேற்ற 60 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

இனி வரும் காலங்களில் அரசு நிர்வாக முடக்கத்தை தவிர்க்க ஆளும் குடியரசு கட்சித் தலைவர்கள், ஜனநாயக கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து சுமூக உடன்பாட்டை எட்டியுள்ளனர். “அமெரிக்காவில் வசிக்கும் இளம் குடியேற்றவாசிகளின் நலன் பாதுகாக்கப்படும்” என்று ஆளும் கட்சி உறுதி அளித்துள்ளது. இதை ஏற்று 2 ஆண்டு பட்ஜெட்டை நிறைவேற்ற ஜனநாயக கட்சி ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது.


குடியரசு கட்சியின் செனட் அவை தலைவர் மிட்ச் மெக்கானல், ஜனநாயக கட்சித் தலைவர் சக் ஷுகுமர் ஆகியோர் 2 ஆண்டு பட்ஜெட் திட்டத்தை செனட் அவையில் கடந்த புதன்கிழமை அறிவித்தனர். இந்த பட்ஜெட்டில் ராணுவம் மற்றும் உள்நாட்டு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய பட்ஜெட் மசோதா விரைவில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து