முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியா ஆதரவு படையினர் மீது அமெரிக்க கூட்டுப்படை தாக்கியதில் 100 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் தாக்குதல் நடத்தியதில் அந்நாட்டு ராணுவம் மற்றும் அதன் ஆதரவுப் படையைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் பதவி விலகக் கோரி 2011-ல் புரட்சி வெடித்தது. ஆனால் அவர் பதவியில் தொடர்ந்து நீடிப்பதால் அங்கு உள்நாட்டுப் போர் நடந்து வரு கிறது. அதிபருக்கு ஆதரவாக ரஷ்யா செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக அமெரிக்கா புரட்சியாளர்கள் மீது அந்நாட்டு ராணுவம் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு ராணுவத்துக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படையும் போரிட்டு வருகிறது. இந்தப் போரில் இதுவரை லட்சக் கணக்கானோர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், டீர் இசோர் மாகாணத்தில் குர்து பிரிவினர் தலைமையிலான சிரியா ஜனநாயக படையினர் (எஸ்டிஎப்) வசமுள்ள பகுதிகள் மீது சிரியா ராணுவமும் அதன் அதரவு படையினரும் நேற்று தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், எஸ்டிஎப் மற்றும் அமெரிக்க கூட்டுப் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் சிரியா ராணுவம் மற்றும் அதன் ஆதரவுப் படையைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பலியானதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து