தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு

வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018      உலகம்
Taiwan earthquake 2018 02 09

தைவான், தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்தது.

இதுகுறித்து மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்ததாவது: செவ்வாய்க்கிழமை இரவு ரிக்டர் அளவு கோலில் 6.4 அலகுகளுக்கு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் மேலும் இருவரது உடல்கள் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. இதையடுத்து, பலி எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.
புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஹுவேலியனை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது. அந்த நகரின் பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் பல கட்டடங்கள் சரிந்துவிழும் ஆபத்தான நிலையில் உள்ளன.

தீயணைப்பு துறையினர் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் இணைந்து நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களை துரிதகதியில் மீட்டு வருகின்றனர். அந்த வகையில், வியாழக்கிழமை நடைபெற்ற மீட்பு நடவடிக்கைகளின்போது அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து மேலும் இருவரது சடலங்கள் மீட்கப்பட்டன. ஆறுபேர் பலியாவதற்கு காரணமான யன் சூய் அடுக்குமாடி குடியிருப்பில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த நிலநடுக்கத்தில் சிக்கி காணாமல் போனதாக தெரியவந்துள்ளது. அவர்களை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து